சுப்ரீம் கோர்ட்டில் இன்று 2 நீதிபதிகள் புதிதாக பதவி ஏற்று கொண்டனர். இதனையடுத்து சுப்ரீம் கோர்ட் இனி நீதிபதிகளின் முழு பலத்துடன் இயங்கும்.
சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி உட்பட மொத்தம் 34 நீதிபதிகள் இருக்க வேண்டும். முன்பு 27 நீதிபதிகளே இருந்தனர். கடந்த 6 ந்தேதி 5 புதிய நீதிபதிகள் பதவி ஏற்றனர். ராஜஸ்தான் ஐகோர்ட் தலைமை நீதிபதி பங்கஜ் மித்தல், பாட்னா ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் ஐகோர்ட் தலைமை நீதிபதி பி.வி.சஞ்சய் குமார், பாட்னா ஐகோர்ட் நீதிபதி அசானுதீன் அமானுல்லா, அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் பதவி ஏற்றக் கொண்டனர். இதனையடுத்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது. இதை யடுத்து மீதமுள்ள 2 இடங்களு க்கும் 2 நீதிபதிகளின் பெயர்களை மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரைத்திருந்தது. அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி ராஜேஷ் பிண்டால் மற்றும் குஜராத் ஐகோர்ட் தலைமை நீதிபதி அரவிந்த் குமார் ஆகிய இருவரது பெயர்களை பரிந்துரைத்து அவர்களை நியமிக்க கோரியிருந்தது. இவர்கள் 2 பேரையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமிப்பதற்கான ஒப்பு தலை ஜனாதிபதி முர்மு வழங்கினார்.
இதன்படி, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ராஜேஷ் பிண்டால் மற்றும் அரவிந்த் குமார் இன்று காலை பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பதவி பிரமாணம் செய்து வைத்தார். நீதிபதி பிண்டால் வருகிற ஏப்ரல் மாதத்துடன் 62 வயது நிறைவு செய்கிறார். இதனால், அவருக்கு 3 ஆண்டு பதவி காலம் மீதமுள்ளது. நீதிபதி அரவிந்த் குமாருக்கு வருகிற ஜூலையுடன் 61 வயது பூர்த்திய டைகிறது. ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது 62 ஆக உள்ளது. எனினும், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 65 வயதுக்கு பின்னர் ஓய்வு பெறுகின்றனர். 2 புதிய நீதிபதிகளின் நியமனத் தினால் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்து உள்ளது.