Take a fresh look at your lifestyle.

சீரியல் நடிகர் பரத்கல்யாண் மனைவி மரணம்

93

பிரபல டிவி சீரியல் நடிகர் பரத் கல்யாண் தொலைக்காட்சி தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரது மனைவி பிரியா, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மோசமானதால் 7 மாதங்களாக அவர் கோமா நிலையில் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் பிரியா சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 5 மணிக்கு உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு காரணம் அவர் உடல் எடையை குறைப்பதற்காக பேலியோ டயட்டில் இருந்தது தான் என்று கூறப்படுகிறது. மேலும், இவரது மறைவு குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பரத் கல்யாண் – பிரியா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.