Take a fresh look at your lifestyle.

சீனாவில் மலை மீது மோதிய விமானம்: 133 பயணிகள் பலி?

83

சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து வுஜோ நகருக்கு இன்று புறப்பட்டது.

அந்த விமானத்தில் 133 பயணிகள் இருந்தனர். விமானம் குவாங்சி மாகாணத்தில் உள்ள மலைப்பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மலை மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் விமானத்துக்குள் பெரும் தீ விபத்து எற்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்து சென்றர். விமானத்தில் பயணித்த 133 பேரின் நிலை என்ன ஆனது? என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. அனைவரும் பலியாகிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.