சிவகங்கை மாவட்டத்தில், காணாமல் போன 207 செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. சிவகங்கை மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிம் ஒப்படைக்கும்படி மாவட்ட எஸ்பி செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன் பேரில் மாவட்ட சைபர்கிரைம் தனிப்படை போலீசார் அது தொடர்பாக விசாரணை நடத்தினர்.
ஐஎம்இஐ எண்கள் மூலம் அவை பயன்படுத்தப்படும் இடங்களில் சென்று விசாரணை நடத்திய போலீசார் அவற்றை மீட்டனர். அதன் பேரில் மீட்கப்பட்ட 207 செல்போன்கள் மீட்கப்பட்டன. அவை இன்று எஸ்பி செந்தில்குமார் உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
அது தொடர்பாக செந்தில்குமார் கூறியதாவது, ‘இளைஞர்களுக்கு அவர்களுடைய காணாமல் போன செல்போனை கண்டுபிடித்து மீட்டுக் கொடுக்கும் போது அவர்களுக்கு உண்டாகும் மகிழ்ச்சியை பார்ப்பது என்பது, காவல் பணியில் மன நிறைவான தருணங்களில் ஒன்றாகும்’’. என தெரிவித்தார்.