‘சிற்பி’ கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்ட 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் * வழியனுப்பி வைத்த தலைமைச் செயலாளர், கமிஷனர் சங்கர்ஜிவால்
சிற்பி திட்டத்தின் கீழ் 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் சென்னை நகர காவல்துறை சார்பில் காவல் உயற்பயிற்சியகத்துக்கு கல்விச்சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். மாணவி களை தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு, கமிஷனர் சங்கர்ஜிவால் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் பள்ளி மாணவர்களுக்காக சிற்பி என்ற திட்டத்தை துவங்கி அது தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக சிற்பி திட்டத்தின் ஒரு பகுதியான கல்வி சுற்றுலாவுக்கு மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்ல சென்னை நகர காவல்துறையால் இன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி இன்று காலை, சிற்பி திட்டத்தில் உள்ள 5,000 மாணவ, மாணவிகளை, சென்னை நகர காவல்துறை சார்பில் ரயில் மூலம் அழைத்துச் சென்று, ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்திற்கு (Tamilnadu Police Academy), இயற்கையுடன் இணைந்த கல்வி சுற்று லாவாக (Eco Friendly Educational Tour) அழைத்து செல்லப்பட்டனர்.
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு, இன்று காலை, எழும்பூர் ரயில் நிலையத்தில் மாணவர்களின் கல்வி சுற்றுலா பயணத்தை கொடியசைத்து ரயில் பய ணத்தை துவக்கி வைத்தார். உடன் சென்னை நகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், இ.கா.ப., மற்றும் காவல் உயரதிகாரிகள் இருந்தனர்.
மாணவர்களின் இந்த கல்விச் சுற்றுலாவுக்காக 4 சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, சிற்பி திட்டத்தின் 5,000 மாணவ, மாணவிகள், சிற்பி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் (Nodal Officers), காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். 5,000 மாணவ, மாணவிகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களை இரயில் மூலம் அழைத்து செல்வதால், சுற்று சூழல் மாசுபடாமல், இயற்கையை பேணி காக்கும் பயணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் லோகநாதன், இணை ஆணையாளர் (தலைமையிடம்) சாமுண்டிஸ்வரி, துணை ஆணையாளர்கள் ராதாகிருஷ்ணன், ராமமூர்த்தி, ஆரோக்கியம் (நவீன கட்டுப்பாட்டறை), சௌந்தராஜன் (ஆயுதப்படை-1), ரயில்வே அதிகாரிகள், சிற்பி திட்ட ஒருங்கிணைப்பு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.