Take a fresh look at your lifestyle.

சிறைக்கைதிகளுடன் அமர்ந்து உணவருந்திய சிறைத்துறை டிஜிபி

79

சிறைக்கைதிகளுடன் அமர்ந்து சிறைத்துறை டிஜிபி உணவருந்திய நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சிறைத்துறை டிஜிபியாக அமரேஷ் புஜாரி கடந்த சில நாட்களுக்கு நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்றதும் சிறைக்கைதிகளிடம் நேரடியாக சென்று அவர்களது குறைகளை கேட்டு அவற்றை களைந்து வருகிறார். நேற்று சென்னை புழல் மத்திய சிறைச்சாலைக்கு அமரேஷ்புஜாரி நேரில் சென்று ஆய்வு செய்தார். கைதிகளிடம் குறைகளை கேட்டறிந்த அவர் அவர்களுடன் தரையில் அமர்ந்து கைதிகளுக்கு அளிக்கப்படும் தட்டில் மதிய உணவை சாப்பிட்டார். இதனால் கைதிகள் மகிழ்ச்சி யடைந்தனர்.