Take a fresh look at your lifestyle.

சிறுமியின் வாயில் கட்டையை திணித்து கொடுமை: ஆசிரம நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

59

ராய்ப்பூர், சத்தீஷ்காரின் மகாசாமுண்ட், பதேராபலி கிராமத்தில் பாக்பாஹ்ரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஜெய் குருதேவ் மனஸ் என்ற பெயரில் ஆசிரமத்துக்கு ராய்ப்பூர் மாவட்டத்தில் அபான்பூர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை, பேய் ஓட்ட வேண்டும் என கூறி கடந்த சில நாட்களுக்கு முன் ஆசிரமத்திற்கு அவரது குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். இந்நிலையில், அந்த சிறுமி தங்களுக்கு வழங்கிய பாயசத்தில் விஷம் கலந்து விட்டது என குற்றச்சாட்டு கூறி ஆசிரம நிர்வாகியான குரு மற்றும் அவரது சீடர்கள் 2 பேர் என மொத்தம் 3 பேர் சேர்ந்து சிறுமியை கடுமையாக அடித்து, தாக்கி உள்ளனர். அந்த சிறுமியின் வாயில் எரியும் மர கட்டையை உள்ளே திணித்து கொடுமைப்படுத்தி உள்ளனர். இதில் சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த சிறுமியின் சகோதரர் போலீசில் புகார் அளித்து உள்ளார். சிறுமி மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, ஆசிரம நிர்வாகி உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.