Take a fresh look at your lifestyle.

சிறார் மன்றங்களை மேம்படுத்த தாம்பரம் காவல்துறையுடன் கைகோர்த்த செயின்ட் கோபன்ட் நிறுவனம்

66

தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்குள் செயல்பட்டு வரும் 2 சிறுவர் சிறுமியர் மன்றங்களை மேம்படுத்தும் நோக்கில் செயின்ட் கோபைன் தனியார் நிறுவனம் தாம்பரம் காவல் ஆணையரகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

தாம்பரம் காவல் ஆணையரகத்தில் ஏடிஜிபி அமல்ராஜ் போலீஸ் கமிஷனராக பதவி ஏற்றபின்னர் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். அதன்படி தற்போது அங்குள்ள சிறார் மன்றங்களை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது தாம்பரம் காவல் ஆணையரகத்தில் 11 சிறுவர் சிறுமியர் மன்றங்கள் (Boys and Girls Club) செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 580 சிறுவர்களும், 241 சிறுமிகளும் பயன் பெற்று வருகின்றனர். இவற்றில் கானத்தூர், மணிமங்கலம் ஆகிய இரண்டு சிறார் மன்றங்களின் கவுரவ ஊதியம், ஏனைய தேவைகள் ஆகியவற்றை நிறைவேற்றுவது தொடர்பாக, தாம்பரம் காவல் ஆணையரக கமிஷனர் மற்றும் செயின்ட் கோபைன் (SAINT GOBAIN) நிறுவனம் ஆகியோருக்கிடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) கையெழுத்தாகியுள்ளது.

அது தொடர்பாக தாம்பரம் காவல் ஆணையரக காவல்துறை தெரிவிள்ளதாவது, ‘‘கானத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடத்தில் செயல்படும் மன்றத்திற்கும், மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடத்தில் செயல்படும் மன்றத்திற்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை செயின்ட் கோபன்ட் தனியார் நிறுவனம் செய்து தர முன்வந்துள்ளது. சிறுவர்கள் விளையாடுவதற்கு தேவையான உபகரணங்களும், மன்றங்களில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கும் சாரண ஆசிரியர் (Scout Master), பராமரிப்பாளர் (Care Taker) ஆகியோருக்கான மிகை ஊதியம் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள செயின்ட் கோபைன் நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது. இம் முயற்சியானது அந்த பகுதிகளில் பயிலும் மாணவர்கள், மாணவிகள் ஆகியோரின் ஒட்டு மொத்த முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.