Take a fresh look at your lifestyle.

சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகள், ஆளிநர்களுக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் பாராட்டு

75

1.  புனித தோமையர்மலை துணை ஆணையாளரின் தனிப்படை பிரிவினர் மடிப்பாக்கம் பகுதியில் காரில் கஞ்சா கடத்தி வந்த இருவரை கைது செய்து, 200 கிலோ கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.


புனித தோமையர்மலை, துணை ஆணையாளர் அவர்களின் தனிப்படையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் ஜோதி பிரகாஷ் தலைமையில், தலைமைக் காவலர்கள் நாராயணன், அசோக் குமார், முதல்நிலைக் காவலர்கள் சங்கர், உமாபதி, காவலர் கார்த்திக்கேயன், ஆயுதப்படை காவலர்கள் கவிஷ்குமார் மற்றும் மகேஷ்குமார் ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் 26.02.2023 அன்று மூவரசம்பேட்டை, மடிப்பாக்கம் கூட்ரோடு சந்திப்பில் வாகன தணிக்கை பணியில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியே காரில் கஞ்சா கடத்தி வந்த பிரேம்நாத், 43, ஆதம்பாக்கம், சென்னை, காரை ஓட்டி வந்த 2. அப்துல் ரகுமான், வ/28, த/பெ.அப்துல்சலாம், புதுவெல் வீடு, பீமபள்ளி, வல்லக்கடவு திருவனந்தபுரம், கேரள மாநிலம் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 200 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா கஞ்சா கடத்தி வந்த 1 கார் பறிமுதல் செய்யப்பட்டது.

2. பள்ளிக்கரணை பகுதியில் தங்கச்சங்கிலி பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிய 2 எதிரிகளை அசோக்நகர் பகுதியில் பிடித்த உதவி ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர். 9 சவரன் தங்கச்சங்கிலி மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்.

கடந்த 14.02.2023 அன்று மதியம் சுமார் 12.40 மணிக்கு, பள்ளிக்கரணை பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் செல்வதாக கட்டுப்பாட்டறை மூலம் கிடைத்த தகவலின்பேரில், தி.நகர் துணை ஆணையாளர் தனிப்டையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் கனகராஜ், தலைமைக் காவலர்கள் R.விஜயகுமார் (27253) மற்றும் N.ராமகிருஷ்ணன் (த.கா.20954) ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர், அசோக்நகர், புதூர் ஐஸ்கூல் அருகே கண்காணித்து, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தின்பேரில், அவர்களை மேலும் விசாரணை செய்தபோது, பிடிபட்ட நபர்கள் சீட்டா விக்கி மற்றும் முகேஷ் என்பதும், இருவரும் சில மணி நேரங்களுக்கு முன்னர் பள்ளிக்கரணை பகுதியில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு தப்பி வருவதும் தெரியவந்தது. அதன்பேரில், எதிரிகள் இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 9 சவரன் தங்கச்சங்கிலி மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, ஆவடி காவல் ஆணையரகத்தின், பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

3. நீலாங்கரை பகுதியில் வயதான மூதாட்டியை கையை பிடித்து சாலையை கடக்க உதவிய போக்குவரத்து உதவி ஆய்வாளர்.

நீலாங்கரை போக்குவரத்து காவல் நிலைய, உதவி ஆய்வாளர் திரு.B.சசிகுமார் என்பவர் கடந்த 12.02.2023 அன்று இரவு நீலாங்கரை, அக்கரை சந்திப்பு அருகே போக்குவரத்து கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஒரு வயதான மூதாட்டி சாலையை கடக்க அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். இதனை கண்ட உதவி ஆய்வாளர் சிவகுமார், அந்த மூதாட்டியின் அருகில் சென்று விசாரித்து, அவரின் கையை பிடித்து சாலையை கடந்து , பத்திரமாக சேர்த்து உதவினார்.

4. வேளச்சேரியில் இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு வந்த 3 நபர்களில் குமரன் நகர் பகுதியில் 1 இளஞ்சிறாரை பிடித்த காவலர்.

15.02.2023 அன்று அதிகாலை, வடபழனி பகுதியில் இரே இருசக்கர வாகனத்தில் வந்த 3 வாலிபர்களை வடபழனி காவல் குழுவினர் மடக்கியபோது, 3 வாலிபர்களும் இருசக்கர வாகனத்தை கீழே போட்டு, தாங்கள் கொண்டு வந்த ஆயுதங்களுடன் தப்பிச் சென்றனர். இது குறித்து காவல் கட்டுப்பாட்டறைக்கு கிடைத்த தகவலின்பேரில், அப்பகுதி முழுவதும் உஷார் படுத்தப்பட்ட நிலையில், அதிகாலை சுமார் 03.30 மணிக்கு, R-6 குமரன் நகர் காவல் நிலைய காவலர் C.மோகன் (கா.55642) என்பவர் காசி தியேட்டர் எதிரில் உள்ள ஸ்கூல் தெரு அருகே ஒரு நபர் பையுடன் மறைந்திருப்பதை கண்டு அவரை பிடித்து, ரோந்து வாகன காவல் குழுவினரிடம் ஒப்படைத்து விசாரணை செய்தனர். விசாரணையில் பிடிபட்ட நபர் இளஞ்சிறார் என்பதும், இவர் 2 நண்பர்களுடன் சேர்ந்து J-7 வேளச்சேரி காவல் நிலைய எல்லையில் இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு, பூட்டை உடைக்கும் ஆயுதங்களான கவுபார், கட்டிங் பிளேயர் உள்ளிட்ட சாதனங்களுடன் குற்றச் செயலில் ஈடுபடுவதற்காக செல்லும்போது, வடபழனியில் காவல் குழுவினர் மடக்கியதால், இருசக்கர வாகனத்தை போட்டுவிட்டு தப்பிச் சென்றதும் தெரியவந்தது.

அதன்பேரில், பிடிபட்ட இளஞ்சிறார் மற்றும் வடபழனி பகுதியில் கைப்பற்றப்பட்ட இருசக்கர வாகனம் ஆகியவை J-7 வேளச்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் தப்பிச் சென்ற 2 வாலிபர்களும் பிடிபட்டனர்.

5. பெரியமேடு பகுதியில் கத்திகளுடன் வந்த 3 நபர்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த காவலர். 6 கத்திகள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல்.

பெரியமேடு காவல் நிலைய காவலர் M.தமிழரசன் (கா.எண்.50153) என்பவர் கடந்த 27.02.2023 அன்று மதியம், சூளை, ரவுண்டனா அருகில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் காவலரை பார்த்ததும் வேகமாக செல்ல முயன்றபோது, காவலர் தமிழரசன் அவர்களை பிடித்து விசாரணை செய்து கொண்டிருந்தபோது, அவர்கள் 6 கத்திகள் வைத்திருந்தது தெரியவந்தது. உடனே காவலர் தமிழரசன் 3 நபர்களையும் மடக்கிப் பிடித்து சுற்றுக் காவல் வாகனத்திற்கு தகவல் தெரிவித்து, 3 நபர்களையும் G-2 பெரியமேடு காவல் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததின்பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில், பிடிபட்ட நபர்கள் ஆறுமுகராஜா, வ/23, அத்திப்பட்டு புதுநகர் பள்ளம், திருவள்ளூர் மாவட்டம், 2.டில்லிபாபு, வ/19, பொன்னேரி, திருவள்ளூர் மாவட்டம், 3.சக்திவேல், வ/19, கண்ணப்பர் திடல், சூளை என்பதும், மூவரும் சேர்ந்து மேற்படி இருசக்கர வாகனத்தை மாங்காடு பகுதியில் திருடிக் கொண்டு வந்ததும், குற்றச் செயலில் ஈடுபடுவதற்காக ஆயுதங்களுடன் சென்றபோது பிடிபட்டதும், இதில் ஆறுமுகராஜா மீது ஏற்கனவே 1 கொலை வழக்கு மற்றும் சக்திவேல் மீது 2 செல்போன் பறிப்பு வழக்குகளும் உள்ளது தெரியவந்தது.

6. அண்ணாநகர் பகுதியில பணியிலிருந்த போக்குவரத்து பெண் காவலரின் பணியை பாராட்டி தத்ரூபமாக படம் வரைந்து கொடுத்து வாழ்த்திய கல்லூரி மாணவர்.

உத்திரபிரதேசத்தை சேர்ந்த அக்‌ஷிவ் திவேதி, வ/17, த/பெ.மனோஜ்குமார் திவேதி என்பவர் சென்னை திரு.வி.க.நகர் பகுதியில் வசித்துக் கொண்டு, அரும்பாக்கம் பகுதியில் உள்ள கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். ஓவியத்தில் ஆர்வம் கொண்ட அக்ஷிவ் திவேதி கடந்த 24.02.2023 அன்று கல்லூரிக்கு செல்லும் வழியில் அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியிலிருந்த பெண் காவலரின் பணியை கண்டு, அவரிடம் சென்று, கடினமான காவல்துறை பணியில் அயராத பணியாற்றி வருவதை பாராட்டி, அவரிடம் அனுமதி கேட்டு மேற்படி பெண் காவலரை பென்சிலால் தத்ரூபமாக வரைந்து கொடுத்து வாழ்த்தினார்.

மேற்படி சம்பவங்களில் சிறப்பாக பணிபுரிந்து, குற்றவாளிகளை கைது செய்த, மனித நேயத்துடன் பொதுமக்களுக்கு உதவிய 15 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் காவல்துறையை பாராட்டி ஒவியம் வரைந்து கொடுத்த கல்லூரி மாணவர் ஆகியோரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் இன்று (01.03.2023) நேரில் அழைத்து, வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.