சென்னை நகர காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 10 காவல் அதிகாரிகள், ஆளிநர்களுக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
சென்னை நகரில் சிறந்த காவல் பணியாற்றும் காவல் அதிகாரிகள், ஆளிநர்களுக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் மாதந்தோறும் நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி வருகிறார். அந்த வகையில் இந்த மாதம் சென்னை மயிலாப்பூர், அரும்பாக்கம், ஜெஜெ நகர், ஓட்டேரி, எம்கேபி நகர் காவல் நிலையங்களில் சிறந்த காவல் பணியாற்றிய காவல் அதிகாரிகள் 10 பேர் கமிஷனர் சங்கர்ஜிவாலிடம் பரிசு பெற்றனர்.
சென்னை அரும்பாக்கம் காவல் நிலைய சுற்றுக்காவல் ரோந்து வாகன பொறுப்பு உதவி ஆய்வாளர் குமாரசாமி, இரண்டாம் நிலைக்காவலர்/ஓட்டுநர் ராமு, மைலாப்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கிருஷ்ணன், காவலர் ஜானகிராமன், பெண் காவலர் சுகாஷினி, ஓட்டேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் (பயிற்சி) அங்காளீஸ்வரன் தலைமைக்காவலர் சசிகுமார், காவலர் கண்டியத், எம்.கே.பி நகர் காவல் நிலைய இரண்டாம் நிலைக் காவலர்கள் கேசவன், லோகநாதன் ஆகியோரை கமிஷனர் சங்கர்ஜிவால் இன்று நேரில் சந்தித்து நற்சான்றிதழ்களை வழங்கினார்.