சிறந்த காவல் பணி: உதவிக்கமிஷனர் முதல் கூடுதல் கமிஷனர் 106 காவல் அதிகாரிகளை நேரில் பாராட்டிய கமிஷனர் சங்கர் ஜிவால்
சென்னை நகரில் கடந்த 2021 -உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2022- உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது சிறந்த முறையில் பாதுகாப்பு அளித்து சிறப்பாக பணிபுரிந்த உதவி கமிஷனர் முதல் கூடுதல் கமிஷனர் வரை சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு கடிதங்கள் வழங்கி கவுரவித்தார்.
வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அன்பு
சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் சிறப்பாக காவல் பணிபுரியும், காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை நேரில் அழைத்து அவர்களது பணியைப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி ஊக்கு விப்பதை வழக்கமாக வைத்து ள்ளார். இதன் தொடர்சியாக 2021ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தல் பணியின் போது, எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் சிறப்பான முறையில் பாதுகாப்பு அளித்து சிறப்பாக பணிபுரிந்த உதவி ஆணையாளர் முதல் கூடுதல் ஆணையாளர் வரையிலான 106 காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு கடிதங்களும், 308 காவல் ஆய்வாளர்களுக்கு MSE (Meritorius Service Entry) எனப்படும் மெச்சத்தகுந்த பணிக்கான பதிவேட்டில் கமிஷனர் சங்கர்ஜிவால் பதிவு பெறச் செய்துள்ளார். மேலும் உதவி ஆய்வாளர்கள் முதல் காவல் ஆளிநர்கள் வரையிலான 15,822 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் GSE (Good Service Entry) சிறந்த பணிக்கான பதிவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களின் பணி பதிவேட்டில் (Service Book) பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஷ்வரி
இதே போன்று கடந்த 2022ம் ஆண்டு மாமல்லபுரம் பகுதியில் நடந்த உலக செஸ் ஒலிம் பியாட் போட்டியின் போதும், துவக்கவிழா மற்றும் நிறைவு விழாவின் போதும் சிறப்பான முறையில் பாதுகாப்பு அளித்து சிறப்பாக பணிபுரிந்த உதவி ஆணையாளர் முதல் கூடுதல் ஆணையாளர் வரையிலான 109 காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு கடிதங்களையும் வழங்கி கமிஷனர் சங்கர்ஜிவால் கவுரவித்துள்ளார். மேலும் 246 காவல் ஆய்வாளர்களுக்கு MSE (Meritorius Service Entry) மெச்சத் தகுந்த பணிக்கான பதிவும், உதவி ஆய்வாளர்கள் முதல் காவல் ஆளிநர்கள் வரையிலான 6,280 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு GSE (Good Service Entry) சிறந்த பணிக்கான பதிவும் என மொத்தம் 215 காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு கடிதங்களும், 554 காவல் ஆய்வாளர்களுக்கு MSE (Meritorius Service Entry) மெச்சத்தகுந்த பணிக்கான பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்த வகையில் உதவி ஆய்வாளர்கள் மூலம் காவல் ஆளிநர்கள் வரையிலான 22,102 காவல் ஆளிநர்கள் GSE (Good Service Entry) சிறந்த பணிக்கான பதிவிற்கு தேர்வு செய்யப்பட்டு காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களின் பணி பதிவேட்டில் (Service Book) பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு மண்டல இணைக்கமிஷனர் திஷா மிட்டல்
அதன்படி இன்று சென்னை வேப்பேரி கமிஷனர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கமி ஷனர் சங்கர் ஜிவால் சிறப்பாக பணிபுரிந்த சென்னை நகர வடக்கு மண்டல இணைக் கமிஷனர் அன்பு, தலைமையிட கூடுதல் கமிஷனர் லோகநாதன், தெற்கு கூடுதல் கமிஷனர்
சைபர் கிரைம் துணைக் கமிஷனர் கிரண் ஸ்ருதி
பிரேம் ஆனந்த் சின்கா, போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில் குமார் சி சரத்கர், தலை மையிட இணைக்கமிஷனர் சாமுண்டிஸ்வரி, கிழக்கு மண்டல இணைக்கமிஷனர் திஷாமிட்டல், சைபர்கிரைம் துணைக்கமிஷனர் கிரண் ஸ்ருதி மற்றும் துணை ஆணை யாளர்கள், உதவி ஆணையாளர்கள் கலந்து கொண்டனர்.
வடசென்னை இணைக்கமிஷனர் ரம்யாபாரதி