Take a fresh look at your lifestyle.

சிரியாவில் இடிபாடில் சிக்கிய தம்பியை 17 மணி நேரம் பாதுகாத்த பாசக்கார துணிச்சல் சிறுமி

93

டமாஸ்கஸ்

கட்டிட இடிபாடுகளில் 17 மணி நேரம் சிக்கியிருந்தும் தன் தம்பிக்கு பாதுகாப்பாக துணிச்சலுடன் இருந்த சிறுமியை உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

துருக்கி மற்றும் சிரியாவில் பூகம்ப பாதிப்பால் சாவு எண்ணிக்கை 15 ஆயிரத்தைத் தாண்டியது. இந்நிலையில் சிரியாவில் மீட்புப் பணிகளின் போது இடிபாடுகளுக்கு இடையே இருந்து ஒரு சிறுமியும் அவளது தம்பியும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அந்த சிறுமியின் வீடியோ உலகம் முழுவதும் வைரலான நிலையில் அதனைப் பகிர்ந்த உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனம், சிறுமியையும், அவளது மனோ திடத்தையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார். 17 மணி நேரமாக இருவரும் கட்டிட இடி பாடுகளில் சிக்கியிருந்தனர். அதன் பின்பு பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். வீடியோவில் அச்சிறுமி ஏதோ பேசுகிறாள். அதனைப் பகிர்ந்துள்ள டெட்ரோஸ் அதோனம், “இந்த துணிச்சலான சிறுமிக்கு எல்லையில்லா பாராட்டு” என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப் படத்தை ஐ.நா பிரதிநிதி முகமது சபா பகிர்ந்து “இந்த 7 வயது சிறுமி இடிபாடுகளுக்கு இடையே தன் தம்பியுடன் 17 மணி நேரம் சிக்கிக் கொண்டார். தம்பி யின் தலையில் கையை வைத்து காப்பாற்றிய இந்த சிறுமியின் புகைப்படத்தை அதிகம் பகிருங்கள். நேர்மறையான சிந்தனைகளை ஊக்குவியுங்கள்” என்று பதிவிட்டிருந்தார்.