Take a fresh look at your lifestyle.

சிட்னியில் தமிழக வாலிபரை சுட்டுக் கொன்ற ஆஸ்திரேலிய போலீஸ்

72

சிட்னியில் தூய்மைப் பணியாளரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த தமிழக வாலிபரை ஆஸ்திரேலியா போலீசார் சுட்டுக் கொன்றனர்.

அப்ரன் பகுதியில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்திற்கு நேற்று (28.02.2023) வந்த நபர் ரெயில் நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த 28 வயது துய்மைப்பணியாளரை கத்தியால் குத்தினார். இந்தத் தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது, அந்த நபர் போலீசார் மீதும் தாக்குதல் நடத்த முற்பட்டார். இதையடுத்து, கத்தியால் குத்திய நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் யார் என்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதும் அவரது பெயர் முகமது ரஹ்மதுல்லா சயது அகமது (வயது 32) என்பதும் தெரியவந்துள்ளது. தற்காலிக விசாவில் ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்த அகமது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.