Myositis என்ற auto immune நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சமந்தா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அந்த நிலையிலும் அவர் யசோதா படத்திற்காக டப்பிங் பேசி இருந்தார். அவரது கடமை உணர்வை பலரும் பாராட்டினார்கள்.
மேலும் சமந்தா விரைவில் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் பிராத்தித்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது சமந்தா இன்று யசோதா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார். அதற்காக அவர் தயாராக இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த புகைப்படங்களில் சமந்தா வாடிய முகத்துடன் இருப்பதை பார்த்து ரசிகர்கள் கலங்கி உள்ளனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.