Take a fresh look at your lifestyle.

சபரிமலையில் ‘பெண்களுக்கு அனுமதி’ அறிவுறுத்தலை வாபஸ் பெற்றது கேரள அரசு

93

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என போலீசாருக்கு கேரள அரசு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்த அறிவுறுத்தலை கேரள அரசு வாபஸ் பெற்று, ஏற்கனவே உள்ள நடைமுறையே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக் குட்பட்ட பெண்களை அனுமதிக்கும்படி கடந்த 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தர விட்டது. இதன் பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டபோது, 10 வயது முதல் 50 வயதுக் குட்பட்ட பெண்கள் பலர், சபரிமலைக்கு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் பக்தர்களின் கடும் எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக அவர்களால் செல்ல முடிய வில்லை. எதிர்ப்பு மற்றும் கொரோனா பரவல் காரணமாக இந்த உத்தரவு இதுவரை அமல்படுத்தப்படாமல் உள்ளது. இந்த நிலையில் மண்டல பூஜைக்காக சபரிமலை நடை நேற்று திறக்கப்பட்டது. இதையடுத்து சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என போலீசாருக்கு கேரள அரசு அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது.

தற்போது சபரிமலையில் அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற கேரள அரசின் அறிவுறுத்தல் வாபஸ் பெறப்பட்டுள்ளது. தவறாக அச்சிடப்பட்டு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக கேரள தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். மேலும், வழிகாட்டு நெறிமுறை புத்தகம் அனைத்தும் திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏற்கனவே நடைமுறையில் உள்ள 10 வயதுக்கு கீழும், 50 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் மட்டுமே சபரிமலைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.