ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ரம்யா கிருஷ் ணன், யோகி பாபு உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக நடைபெறும் இப்படத்தின் படப்பிடிப்புகள் 50 சதவிகிதம் முடிந்து விட்டதாகவும் ஏப்ரல் 14 ந் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வீட்டிற்கு நேற்று சென்றார். அவரை சந்திரபாபு நாயுடு பொன்னாடை அணிவித்து வர வேற்றுள்ளார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் ஜெயிலர் திரைப்பட படப்பிடிப்பு குறித்து சந்திரபாபு நாயுடு கேட்டறிந்த தாகவும், ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து சந்திரபாபு நாயுடு கேட்டறிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர, தமிழ்நாடு அரசியல் சூழல்கள் குறித்து விவாதித்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.