சட்டம், ஒழுங்கு போலீசாருக்கு ‘இ’ சலான் மற்றும் மூச்சு சோதனை கருவிகள்: கமிஷனர் சங்கர் ஜிவால் வழங்கினார்
சென்னை நகரில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களிடம் சோதனை நடத்தி அபராதம் விதிக்க இசலான் மற்றும் மூச்சுப் பரிசோதனை கருவிகளை கமிஷனர் சங்கர்ஜிவால் வழங்கினார்.
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் போல, சட்டம் ஒழுங்கு பிரிவினரும், மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுபவர்களை சோதனை மேற்கொண்டு அபராதம் விதிக்கும்படி கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து சென்னை பெருநகர காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையங்களுக்கு வேப்பேரி காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 90 ‘இ’-சலான் கருவிகள் (E-Challan devices) மற்றும் 90 மூச்சு சோதனைக் கருவிகளை (Breath Analyser devices) கமிஷனர் சங்கர்ஜிவால் வழங்கினார்.
குறிப்பாக குடிபோதையில் வாகனம் ஓட்டுவது தொடர்பாக மோட்டார் வாகனச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு மொத்தமாக 126 இ சலான் இயந்திரங்களும் 126 ப்ரீத் அனலைசர்களும் இப்போது சட்டம் மற்றும் ஒழுங்குப் பிரிவு காவல்துறையிடம் உள்ளன. இந்த ஒருங் கிணை ந்த முயற்சிகள் குடிபோதையில் வாகனம் ஓட்டும் சம்பவங்கள் மற்றும் சாலை போக்கு வரத்து விபத்துக்களின் எண்ணிக்கையை மேலும் குறைக்க வழிவகுக்கும்.
மேலும் சட்டம், ஒழுங்கு சார்ந்த அடிதடி வழக்குகள் மற்றும் சொத்து சார்ந்த குற்ற வழக்குகளின் விகிதமும் குறையும். இதனால் அது தொடர்பான கலந்தாலோசனை கூட்டமும் சென்னை வேப்பேரி யில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது. காவல்துறை அதிகாரி களுக்கு மோட்டார் வாகனச் சட்டத்தை அமல்படுத்துவது சம்பந்தமாக வகுக்கப்பட்டுள்ள நிலையான நெறிமுறைகளைப் பின்பற்றவும், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக வழக்குகளை பதிவு செய்யும் போது உடலில் அணிந்து பயன்படுத்தக் கூடிய கேம ராக்களை அணியும்படி கமிஷனர் சங்கர்ஜிவால் போலீஸ் அதிகாரிகளுக்கு வலி யுறுத்தினார்.