Take a fresh look at your lifestyle.

கோவை கார் வெடிப்பு வழக்கு: கைதான 6 பேர் பூந்தமல்லி என்.ஐ.ஏ கோர்ட்டில் ஆஜர்

91

கோவை கார் வெடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேர் இன்று காலை பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23ம் தேதி அதிகாலை 4 மணியளவில் கார் வெடித்து ஜமேஷா முபின் (வயது 28) என்பவர் பலியானார். உயிரிழந்த முபீன் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் ஏராளமான வெடி பொருட்கள், ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கில் முகமது அசாருதீன் (23), அப்சர்கான் (28), முகமது தல்கா (25), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மா யில் (26), முகமதுநவாஸ் இஸ்மாயில் (27) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 6 பேர் மீது உபா சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து 6 பேரையும் காவலில் எடுத்து விசாரணை செய்வதற்காக இன்று காலை புழல் சிறையிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு சென்னை பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 6 பேருக்கும் வரும் 22ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து, 22ம் தேதி மீண்டும் என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.