Take a fresh look at your lifestyle.

கோவையில் மதீனத்து ரோஜா 2023 மீலாது விழா மாநாடு மற்றும் வலிமார்களின் உரூஸ் முபாரக்

112

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், மதீனத்து ரோஜா 2023 மீலாது மாநாடு மற்றும் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜெய்லானி நாயகம், அஜ்மீர் ஹாஜா கரீப் நவாஸ் நாயகம், நாகூர் சாகுல் ஹமீது பாதுஷா நாயகம், அஸ்செய்யிது மழ்ஹர் ரப்பானி நாயகம் ஆகிய வலிமார்களின் உரூஸ் முபாரக் வைபவங்கள் ஆனைமலை S.A. மஹாலில் நடந்தன.

நிகழ்ச்சியின் ஆரம்பமாக காலை 7 மணி அளவில் சுப்ஹான மவ்லித் ஓதப்பட்டது. பின்னர் ஜியாரத் பேரணி மற்றும் ஹிதாயா மதரஸா மாணவ மாணவிகளின் ஆண்டு விழா சிறப்புடன் நடைபெற்றது. அதனையடுத்து கம்பம் அம்பா கல்வத்தி அவர்களின் ஆஜார் முபாரக் காட்டப்பட்டது. இவ்விழாவில் ஆண்களும், பெண்களும் பெருந்திரளாக வந்து பார்த்துச் சென்றார்கள். அதனை அடுத்து பஸ்மே ரப்பானி மதரசாவின் சார்பாக புர்தா மஜ்லிஸ் தாயிராக்கள் முழக்கத்துடன் நடந்தது. பின்பு மாலையில் அமர்வு சாதாத்மார்கள் சங்கமிக்கும் மாநாடு மௌலவி முஹம்மது எஹியா நூறானி கிராத்துடன் துவங்கியது.
மௌலவி அப்துர் ரஹ்மான் அஹ்ஹசனி தங்கள் (திருவிதாங்கோடு) ஹஜ்ரத் உரை யாற்றினார். .அதனையடுத்து அஸ்செய்யிது அஸ்ஸர் ரப்பானி நாத் ஷரீஃப் படிக்க, மவுலானா மவுலவி பீர் ஜாதா அஸ்ஸெய்யிது அன்வர் ரப்பானி ஹழ்ரத் கிப்லா அஜ்மீர் காஜா நாயகத்தின் சிறப்பு குறித்து பேருரை நிகழ்த்தினார். அதனை தமிழ் மொழி பெயர்ப்பும் செய்யப்பட்டது.

பின்னர் மிக சுருக்கமாக அஸ்ஸெய்யிது ஜிப்ரீ தங்கள் கல்லடிக்கோடு நஸீஹத் செய்தார். பின்னர் இம்பிச்சி கோயா அல்புகாரி பாயார் தங்கள் (கேரளா) சுன்னத்வல் ஜமாஅத்தான் வெற்றிக்குரிய கூட்டம் மற்ற அனைத்தும் வழிகேடு. அவைகள் நரகத்திற்கு உரியது. ஆகவே பித்அத் காரர்களுடன் நாம் தொடர்பு வைக்க வேண்டாம் என்று அழகிய பிரசங்கம் செய் தார். பின்னர் அனைவரையும் எழுந்திருக்க வைத்து ஸலவாத் , பாத்திஹா ஓதி உருக்க முடன் பாயார் தங்கள் துஆச் செய்தார். இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சி, திருப்பூர், கோவை, பழனி, திண்டுக்கல், தூத்துக்குடி, காயல் பட்டணம் போன்ற பகுதிகளில் இருந்து ஏராள மான இஸ்லாமியர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள். பாயார் தங்கள் அவர்க ளிடம் தண்ணீர் ஓதி ஏராளமானோர் வாங்கிச் சென்றனர். நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் தப்ரூக் என்னும் உணவு வழங்கப்பட்டது. விழாவினை பொள்ளாட்சி ஆனைமலை தமிழக முஸ்லீம் ஜமாஅத் & சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பு & ஆகி யோர்கள் சிறப்புடன் செய்திருந்தார்கள். நிகழ்வுகளை தமிழக முஸ்லீம் ஜமாஅத் செய்தி பிரிவாளர் காயல் ஜெஸ்முதீன் தொகுத்தளித்தார்.