Take a fresh look at your lifestyle.

கோர்ட் வளாகத்தில் பரபரப்பு: மகனை கொன்றவர்களை பழி வாங்க முயன்ற தந்தை

143

சென்னை, அல்லிக்குளம் கோர்ட் வளாகத்தில் ஆஜராக வந்த இரண்டு கைதிகளை கத்தியால் குத்தி கொலை செய்து பழி தீர்க்க முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, சூளைமேடு, பெரியார் பாதையைச் சேர்ந்தவர் உதயகனி (வயது 60). இவரது மகன் ஆண்டனி உபால்ட். இவரை கடந்த 2020-ம் ஆண்டு பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை தொடர்பாக சென்னை அசோக்நகரைச் சேர்ந்த ஐயப்பன் மற்றும் கார்த்திக் ஆகியோர் வெட்டிக் கொலை கொலை செய்தனர். இந்த முன்விரோதம் காரணமாக தனது மகனை கொலை செய்த நபர்களை கொல்ல உதயகனி சமயம் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆன்டனி கொலை வழக்கு தொடர்பாக நேற்று மதியம் 1.30 மணியளவில் சென்னை, சென்ட்ரல், அல்லிக்குளம் இரண்டாவது தளத்தில் உள்ள 20-வது கூடுதல் நீதிமன்றத்திற்கு கொலையாளிகள் ஐயப்பன், கார்த்திக் ஆகியோரை போலீசார் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வந்தனர். பாதுகாப்புக்காக புழல் சிறையில் இருந்து ஆயுதப்படை போலீசார் வழிகாவல் மூலம் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தரை தளத்தில் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த உதயகனி தான் மறைத்து வைத்திருந்த ஒரு அடி நீளமுள்ள அரிவாளை எடுத்து ஐயப்பன், கார்த்திக் இருவரையும் வெட்டப்பாய்ந்தார். அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாதுகாப்புக்காக வந்த போலீசார் மதன குரு, சேகர் உதயகனியை மடக்கிப் பிடித்தனர். அவரை பெரியமேடு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் உதயகனியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.