Take a fresh look at your lifestyle.

கோட்டூர் குஞ்ஞஹம்மது முஸ்லியாருக்கு இமாம் பூஸிரி விருது

57

சென்னையில் எஸ்எஸ்எப் தமிழ்நாடு அமைப்பின் சார்பில் கோட்டூர் குஞ்ஞு அஹம்மது முஸ்லியாருக்கு இமாம் பூஸுரி விருது வழங்கப்பட்டது.

 

மார்க்க அறிவுத்துறையில் அளப்பரிய சேவையாற்றிய அறிஞர் பெருமக்களுக்கு எஸ்எஸ்எப் தமிழ்நாடு மாநில குழுவினரால் இமாம் பூஸூரி நினைவு விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த முறை இந்த விருது சமஸ்த கேரளா ஜம்இய்யத்துல் உலமா பொருளாளர் தாஜுல் முஹக்கிகீன் கோட்டூர் குஞ்ஞஹம்மது முஸ்லியாருக்கு வழங்கப்பட்டது. குஞ்ஞஹம்மது கடந்த ஆறு தசாப்தங்களாக தர்ஸ் (கல்வி) துறையில் சேவைகள் மற்றும் ஆன்மீக தொண்டு துறைகளில் பல சேவைகளை ஆற்றியதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டதாக விருது குழு தெரிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் எம்.எம்.ஏ ஹாலில் நடந்த இந்த ஹுப்புர் ரசூல் மாநாட்டில் தமிழக முஸ்லிம் ஜமாஅத் மாதில துணைத் தலைவர் மன்சூர் ஹாஜி இந்த விருதை குஞ்ஞஹம்மதுவுக்கு வழங்கினார். இந்த விழாவில் முஸ்லிம் ஜமாஅத் மாநில செயற்குழு உறுப்பினர் சுலைமான் ஸகாபி மாளியேக்கல் மௌலானா முஹம்மது சலீம் சிராஜி, மௌலானா முஹம்மது ஹாரிஸ் ஸகாபி, மௌலானா நூருத்தீன் ஸகாஃபி
, தமிழக முஸ்லிம் ஜமாஅத் சென்னை செயலாளர் ஏராமலை முஹம்மது ஹாஜி,
தலைவர் அஷ்ரப் ஹாஜி, சென்னை மாவட்ட ஜமாஅத்துல் உலமா துணைச் செயலாளர் என். அப்துல் காதர் சிராஜி மற்றும் எஸ்எஸ்எப் தமிழ்நாடு மாநில தலைவர் கமாலுதீன் ஸகாபி மற்றும் பல பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். விழா குறித்த தகவல்களை செய்தித் தொடர்பாளர் காயல் ஜெஸ்முதீன் தொகுத்து வழங்கினார்.