கொடுங்கையூரில் ரூ. 28 லட்சம் தீபாவளி சீட்டு மோசடி செய்த பெண் கைது
28 lakhs chit fraud arrest in chennai kodungayur
சென்னை, கொடுங்கையூர் பகுதியில் தீபாவளி பண்டு சீட்டு நடத்தி ரூ. 28 லட்சம் மோசடி செய்த பலே பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, பிராட்வே, பிடாரியார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராணி (வயது 42). இவர் மற்றும் 140 நபர்கள் கடந்த 2019ம் ஆண்டு முதல் கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் மற்றும் அவரது மனைவி சாந்தி ஆகியோர் நடத்தி வந்த தீபாவளி பண்டு சீட்டில் பணம் கட்டி வந்தனர். சீட்டு முதிர்வடைந்த பிறகும் பணத்தை திரும்ப தராமல் ஏமாற்றியது தொடர்பாக கொடுங்கையூர் காவல் நிலையத்தில் ராணி புகார் அளித்தார். அதன் பேரில் கொடுங்கையூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்தது உண்மை என்பது தெரியவந்தது. அதனையடுத்து சாந்தியை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் சாந்தி மற்றும் அவரது கணவர் நந்தகுமார் தீபாவளி பண்டு சீட்டு நடத்தி பொதுமக்களிடமிருந்து சுமார் ரூ. 28 லட்சத்து 60 ஆயிரம் மோசடி செய்தது தெரியவந்தது. விசாரணைக்குப்பின்னர் கைது செய்யப்பட்ட சாந்தி நேற்று (21.05.2022) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.