தெலுங்குப்பட இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் இந்தப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். தீபாவளி தினத்தன்று ‘வாரிசு’ திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற வாரிசு படப்பிடிப்பு தளத்திற்கு தில் ராஜு மற்றும் அவரது குடும்பத்தினர் வந்தனர். அப்போது தில் ராஜுவின் குழந்தையை நடிகர் விஜய் கையில் வைத்திருக்கும் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் தங்களது லைக்குகளை குவித்து வருகின்றனர்.