Take a fresh look at your lifestyle.

குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட ரூ. 3.67 கோடி களவு பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

78

ஆவடி காவல் ஆணையரகத்தில் திருடர்களிடம் இருந்து மீட்கப்பட்ட ரூ. 3. 67 கோடி மதிப்புள்ள களவு பொருட்களை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

ஆவடி காவல் ஆணையரக எல்லையில் களவு போய் மீட்கப்பட்ட பொருட்களை உரிய வர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று ஆவடி எஸ்எம் நகரில் உள்ள காவலர் திருமண மண்டபத்தில் நடந்தது. ஆவடி காவல் ஆணையரக எல்லைகளில் நடந்த திருட்டு சம்பவங் களில் குற்றப்பிரிவு போலீசார் கடந்த 3 மாதங்களில் 174.25 சவரன் தங்க நகைகள், வெள்ளி- 0.586 கிராம், 331 செல்போன்கள், 17 இருசக்கர வாகனங்கள்- 17, 127 கேமராக்கள், 11 தொலைக் காட்சிகள், மற்றும் ரூ. 10 லட்சம் ரொக்கம் ஆகியவைகளை பறிமுதல் செய்தனர்.

குறிப்பாக கடந்த செப்டம்பர் மாதம் நகைச்சுவை நடிகர் போண்டா மணி சிறுநீரக நோய் சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு உதவி செய்வது போல நடித்து அவரிடம் ஏடிஎம் கார்டை வாங்கிச் சென்ற திருப்பூரைச் சேர்ந்த தினேஷ் என்ற நபர் ரூ. 1 லட்சம் ரூபாய்க்கு நகை வாங்கி மோசடி செய்தார். அது தொடர்பாக எஸ்ஆர்எம்சி போலீசார் 2 மணி நேரத்தில் நடவடிக்கை மேற்கொண்டு தினேஷை கைது செய்து அவரிடம் இருந்து 21 கிராம் தங்க நகைகளை மீட்டனர். அந்த நகையை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நடிகர் போண்டாமணியிடம் ஒப்படைத்தார். மேலும் ரூ. 3 கோடியே 67 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நேற்று உரிய வர்களிடம் ஒப்படைக் கப்பட்டன. மேலும் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள், காவலர்களுக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.