Take a fresh look at your lifestyle.

குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவதில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் பாராட்டு

shankar jiwal ips rewardered police personals

67

சென்னை நகரில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவதில் சிறப்பாக பணிபுரிந்த கோர்ட் வழக்குகளை கண்காணிக்கும் காவலர்கள் மற்றும் எஸ்ஐ ஆகியோருக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

பழவந்தாங்கல் பகுதியில் காணாமல் போன 26 வயது வாலிபரை சிறப்பாக புலனாய்வு செய்து கண்டுபிடித்த உதவி ஆய்வாளர் மற்றும் முதல் நிலைக்காவலர்.

சென்னை, நங்கநல்லூர், இந்து காலனியைச் சேர்ந்த பெருமாள், 55 என்பவர் கடந்த 26.06.2021 அன்று பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் தனது மகன் தமிழரசன், 26 என்பவர் வீட்டை விட்டு வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை எனவும், அருகில் உள்ள இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரை கண்டுபிடித்து தருமாறு கூறியிருந்தார். அதன் பேரில் பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் Man Missing பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது. காணாமல் போன தமிழரசனை கண்டுபிடிக்க பழவந்தாங்கல் போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் தமிழரசன் சென்னை, எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் தங்கிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், பழவந்தாங்கல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு, முதல் நிலைக்காவலர் வினோத்குமார் ஆகியோர் சென்னை எம்.ஜி.ஆர் நகருக்கு சென்று விசாரணை நடத்தினர். காணாமல் போன தமிழரசன் வாடகைக்கு வீடு எடுத்து ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் தமிழரசனை கண்டுபிடித்து அவரது பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.

கொலை, போக்சோ, தற்கொலைக்கு தூண்டுதல் போன்ற குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர உதவிய நீதிமன்ற அலுவல் பணி புரியும் 6 காவல் ஆளிநர்களுக்கு பாராட்டு.


கடந்த 2011ம் ஆண்டு, சென்னை, ஆதம்பாக்கம், டாக்டர் அம்பேத்கர் நகர் 20வது தெருவில், வசித்து வந்த காசி விஸ்வநாதன் 42, என்பவர் அவரது மனைவி சாந்தகுமாரி, 24 என்பவரை சந்தேகப்பட்டு கொலை செய்தார். அது குறித்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு காசி விஸ்வநாதன் காவலுக்கு உட்படுத்தப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக, செங்கல்பட்டு மாவட்டம், கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஆதம்பாக்கம் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும், நீதிமன்ற அலுவல் புரியும் தலைமைக்காவலர் ரமேஷ்குமார் முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தினர். வழக்கு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக கண்காணித்தும் வந்த நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளின்படி வழக்கு விசாரணை முடிவடைந்து காசி விஸ்வநாதன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளி காசி விஸ்வநாதனுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ. 1,000/- அபராதமும் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

கடந்த 2014 ம் ஆண்டு சைதாப்பேட்டை பகுதியில் 6 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக மேற்கு மாம்பலம் முருகன் (எ) முருகேசன் (எ) செல்வம் என்பவர் மீதும், கடந்த 2016ம் ஆண்டு குமரன் நகர் பகுதியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக ரங்கநாதன் 72, ஏகாம்பரம் என்பவர் மீதும் சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். மேற்படி இரண்டு வழக்குகளின் விசாரணை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் 2 வழக்குகளிலும் குற்றபத்திரிகை தாக்கல் செய்தும், நீதிமன்ற அலுவல் புரியும் தலைமைக்காவலர் கொங்கல்பிரட்டி முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகளின் படி வழக்கு விசாரணை முடிவடைந்து குற்றவாளி முருகன் (எ) முருகேசன் (எ) செல்வம் என்பவருக்கு 5 வருடங்கள் சிறைதண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும், மற்றொரு வழக்கில் குற்றவாளி ரங்கநாதன், 72 ஆகியோருக்கு 10 வருடங்கள் சிறை தண்டனையும், ரூ.5,000/- அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

கடந்த 20.05.2019 அன்று மெரினா கடற்கரையில் ராட்டினத்தில் சிக்கி 8 வயது சிறுவன் இறந்தது தொடர்பாக அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் 304 பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ராட்டினம் உரிமையாளர் அம்பத்தூரைச் சேர்ந்த பிரகாஷ் (33) என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். வழக்கின் விசாரணை எழும்பூர் பெருநகர நடுவர் 2வது நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அண்ணாசதுக்கம் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும், நீதிமன்ற அலுவல் புரியும் முதல் நிலைக்காவலர் இளவரசன் (மு.நி.கா.39459) முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தியும், வழக்கு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக கண்காணித்தும் வந்த நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளின் படி வழக்கு விசாரணை முடிவடைந்து குற்றவாளி பிரகாஷ் என்பவருக்கு 1 வருடம் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

சென்னை, கிண்டி, மடுவங்கரை, 5வது தெருவைச் சேர்ந்த உஷாராணி, 30 என்பவர் அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார். கடந்த 19.01.2020 அன்று பட்டி பந்தல பென்சால பிரசாத் தனது மனைவி உஷாராணியின் கழுத்தை வாஷிங் மெஷின் டியூப்பால் நெரித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இது குறித்து கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி ஆந்திர மாநிலத்தைச்சேர்ந்த பட்டி பந்தல பென்சால பிரசாத்தை கைது செய்தனர்.

மேலும் சென்னை, மதுரவாயல், தனலட்சுமி நகர், 1வது குறுக்குத் தெரு, 7வது தெருவில் செல்லியம்மாள் பவர் குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த 2015 ஆண்டு தூக்குப்போட்டு, தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கிண்டி போலீசார் தீவிர விசாரணை செய்து, தற்கொலைக்கு துண்டுதலாக இருந்த செல்லியம்மாளின் கணவர் மதன்குமார், 25 என்பவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவுப்படி, சிறையில் அடைத்தனர்.

மேற்படி இரண்டு வழக்குகளிலும் J-3 கிண்டி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல்குழுவினர் தீவிர விசாரணை செய்து, குற்றப்பத்திரிகையை, சென்னை, அல்லிகுளம் மகிளா நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். நீதிமன்ற அலுவல் புரியும் முதல் நிலைக்காவலர் சரவண விஜய் ஆனந்த் நீதிமன்றத்தில் முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தியும், வழக்கு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டும் வந்த நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளின்படி வழக்கு விசாரணை முடிந்து மனைவியை கொலை செய்த வழக்கில் குற்றவாளி பட்டி பந்தல பென்சால பிரசாத் என்பவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதமும், மனைவியை தற்கொலைக்கு தூண்டிய மற்றொரு வழக்கில் கணவர் மதன்குமார் என்பவருக்கு 13 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 15,000/- அபராதமும், , மாமனார் சடகோபன் 65, என்பவருக்கும், மாமியார் செந்தாமரை, ஆகிய இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5,000/- அபராதமும், நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்கினார்.

தி.நகர் காவல் மாவட்டத்தில் வசித்து வந்த 14 வயது சிறுமிக்கு, அவரது தாய் மற்றும் பாட்டி ஆகிய இருவரும் பாலியல் ரீதியாக அடிக்கடி தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர். இது குறித்து சிறுமியின் தந்தை கடந்த 2018ம் ஆண்டு தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். காவல் ஆய்வாளர் விசாரணை செய்து சிறுமியின் தாய் பழனிபிரியா, வ/38, மற்றும் பாட்டி சாந்தி, வ/56, ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், W-24 தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும், நீதிமன்ற அலுவல் புரியும் தலைமைக்காவலர் திருமதி.பத்மபிரியா (த.கா.27767) முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தியும், வழக்கு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக கண்காணித்தும் வந்த நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளின்படி வழக்கு விசாரணை முடிவடைந்து மேற்படி வழக்கில் பழனிபிரியா மற்றும் சாந்தி ஆகிய இருவர் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளி பழனிபிரியா என்பவருக்கு ஆயுள்தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் மூன்று மாதங்கள் சிறை தண்டனையும், சாந்தி என்பவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் 25 ஆயிரம் அபராதமும் என கனம் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்கினார்.

மேற்கண்ட வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த உதவி ஆய்வாளர் மற்றும் 6 காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.