Take a fresh look at your lifestyle.

கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் முதல்வருக்கு கடிதம்

44

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் 25 லட்சத் திற்கும் கூடுதலான மக்கள்தொகை கொண்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 8 ஆகும். மக்கள் தொகை அடிப்படை யில், இன்றைய நிலையில் பெரிய மாவட்டம் திருவள்ளூர் ஆகும். அதன் மக்கள்தொகை 37 லட்சம். அடுத்து சேலம், கோவை ஆகிய மாவட்டங்கள் தலா 35 லட்சம் மக்கள் தொகையுடன் அடுத்த இரு இடங்களை வகிக்கின்றன. இந்த மாவட்டங்கள் உலகில் உள்ள 103 நாடுகளை விட அதிக மக்கள் தொகை கொண்டவை. ஒரு நாட்டை விட ஒரு மாவட்டத்தின் மக்கள்தொகை அதிகமாக இருக்கும் போது, அங்கு வளர்ச்சி சாத்திய மாகாது. எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, கும்பகோணத்தை தலைமை யிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை அரசு அமைக்க வேண்டும். அதேபோல், தமிழ் நாட்டில் மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டங்களையும் பிரித்து, 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என்ற அளவில் புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.