Take a fresh look at your lifestyle.

குத்துச் சண்டையில் சாம்பியன் வென்ற காவலருக்கு டிஜிபி பாராட்டு

133

சென்னையில் நடந்த குத்துச் சண்டை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற காவலரை டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்தார்.

26.03.2022 அன்று, சென்னையில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தாம்பரம் ஆயுதப்படை காவலர் வீரமணி கலந்து கொண்டார். அந்த போட்டியில் அவர் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் செ.சைலேந்திர பாபு, டிஜிபி அலுவலகத்திற்கு, காவலர் வீரமணியை நேரில் அழைத்து பாராட்டி பண வெகுமதி வழங்கி கவுரவித்தார்.