சென்னை நகரில் போலீஸ் கமிஷனர் உத்தரவின்பேரில், சென்னையிலுள்ள 145 குடிசை மாற்று வாரிய பகுதிகளில் காவல்துறை சார்பில் பாதுகாப்பு, போக்சோ சட்டம் மற்றும் போதை எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்கள் (POCSO ACT & Anti – Drug Awareness) நடத்தப்பட்டது.
சென்னை நகரில் குற்றங்களைத் தடுக்கும் வகையில் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் பொதுமக்கள்- காவல்துறை நல்லுறவை மேம்படுத்த அவ்வப்போது குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் குடிசை பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுடன் காவல் துறையினர் கலந்தாய்வு மேற்கொண்டு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று (24.02.2023) நடந்த சிறப்பு முகாமில், சென்னை பெருநகர காவல் குழுவினர், 179 தன்னார்வலர்கள் மற்றும் சிறப்பு நிபுணர்கள் ஒருங்கிணைப்புடன் சென்னையிலுள்ள 145 குடிசை மற்றும் குடிசைமாற்று வாரிய பகுதிகளுக்கு சென்று பாதுகாப்பு, போக்சோ சட்டம் மற்றும் போதை எதிர்ப்பு ( POCSO Act & Anti – Drug Awareness) குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்தினர். இந்த ம்முகாம்களில், பொதுமக்கள் பாதுகாப்பு குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைக் கப்பட்டது. மேலும், பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக, பாலியல் ரீதியான தொந்தரவுகளில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளவும், 18 வயதுக்குட்பட்ட பெண் குழந் தைக ளுக்காக அமல்படுத்தப்பட்ட பாலியல் குற்றங்களில் இருந்து பெண் குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டம் (Protection of Childrens from Sexual Offences Act-2012) குறித்தும், போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போதை பொருள் நடமாட்டத்தை அறவே ஒழிக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் எனவும் எடுத்துரைக்கப்பட்டது.
நேற்றைய விழிப்புணர்வு முகாம்களில் மொத்தம் 2,896 பொதுமக்கள் கலந்து கொண்டு காவல்துறையின் அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை கேட்டு பயனடைந்தனர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் வசிக்கும் பொதுமக்கள் நலனுக்காகவும், பாதுகாப்புக்காகவும் பல்வேறு குற்ற தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், காவல்துறை – பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தவும், காவல்துறையின் 24 மணி நேர உதவி குறித்தும் பொதுமக்கள் அறிந்திடும் வண்ணம் இது போன்ற கலந்தாய்வு கூட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது.
******