Take a fresh look at your lifestyle.

குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1, 5ம் தேதிகளில் சட்டப்பேரவை தேர்தல்

118

புதுடில்லி

குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ம் தேதி என இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8 ந்தேதி நடைபெறும் என்றும் அவர் அறிவித்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து குஜராத்தில் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. முன்னதாக கடந்த மாதம் இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது குஜராத் தேர்தல் தேதியும் சேர்த்தே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவ்வாறு வெளியாகவில்லை. இந்நிலையில் இன்று நண்பகல் 12 மணிக்கு அறிவிப்பு வெளியானது.