மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு, கோவை கார் வெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ். பயங்க ரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு இஸ்லாமிய தனியார் ஊடகம் மூலமாக 68 பக்கங்கள் கொண்ட அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், அக்டோபர் மாதம் 23-ந்தேதி கோவையில் நடந்த கார் வெடிப்பு, நவம் பர் மாதம் 19-ந்தேதி மங்களூருவில் நடந்த குக்கர் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு தங்கள் அமைப்பு பொறுப்பு ஏற்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் ‘தமிழ்நாடு கோவை, கர்நாட கத்தின் மங்களூருவில் எங்கள் சகோதரர்கள் எங்கள் மதத்தின் மரியாதைக்காக குண்டு வெடிப்பு சம்பவத்தை அரங்கேற்றினர். பா.ஜனதா மற்றும் இந்திய ராணுவத்துக்கு எதிராக எங்களுக்கு விரோதம் உள்ளது. அவர்களுக்கு எதிராக தென்னிந்தியாவில் எங்களின் முஜாகிதீன்கள் போரை நிகழ்த்தினர். கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் எங்கள் முஜாகிதீன்களின் செயல்பாடு அதிகரித்துள்ளது’ என்றும் அதில் குறிப்பிடப் பட்டுள்ளது. இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.