Take a fresh look at your lifestyle.

கீழ்ப்பாக்கம் துணிக்கடையில் இரும்பு ஸ்லைடிங் கேட் சரிந்து விழுந்து 6 வயது சிறுமி பலி: நிறுவன மேலாளர் உள்பட இருவர் கைது

71

சென்னை கீழ்ப்பாக்கம் துணிக்கடையில் இரும்பு ஸ்லைடிங் கேட் சரிந்து விழுந்அது 6 வயது சிறுமி பரிதாபமாக பலியானார். இந்தச் சம்பவம் தொடர்பாக நிறுவன மேலாளர் உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை நம்மாழ்வார் பேட்டை சிவகாமிபுரம் பரக்காசாலையை சேர்ந்த சங்கர் வாணி தம்பதிகளின் மகள் ஸ்ரீஹரிணி (வயது 6). இன்னொரு மகன் உள்ளார். ஸ்ரீஹரினி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தார். சங்கர், கீழ்ப்பாக்கம், ஹார்லிக்ஸ் சாலையில் உள்ள பிஎம்எஸ் டவர் கட்டிடத்தில் பேப் இந்தியா என்ற துணிக்கடை நிறு வனத்தில் வாகனங்கள் ஒழுங்குப்படுத்தும் பணி செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு சங்கர் பணியில் இருந்த போது அங்கு சங்கரின் மனைவி வாணி மற்றும் அவரது மகள் ஸ்ரீ ஹரிணி அங்கு வந்துள்ளனர். வளாகத்தில் உள்ள 20 அடி அகலம் கொண்ட ஸ்லை டிங் கேட்டை திறக்கும் போது அந்த கேட் சிறுமி ஸ்ரீஹரிணி மீது சரிந்து விழுந்துள்ளது. இதில் ஹரினியின் தலை மற்றும் உடல் முழுவதும் நசுங்கியது. படுகாயத்துடன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி இன்று அதிகாலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். ஸ்லைடிங் இரும்பு கேட் முறையான பாதுகாப்பு அம்சம் இன்றி பொருத்தப்பட்டிருந்ததால் கேட் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஸ்ரீ ஹரிணி உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் நேற்று கீழ்ப்பாக்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாய் வாணி கண்ணீருடன் கூறுகையில், ‘‘எனது கணவரை நான் கம்பெனியில் தினமும் காலையில் வேலைக்கு விட்டு விட்டு இரவு வந்து அழைத்துச் செல்வது வழக்கம். வழக்கம் போல நான் என் கணவரை வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக கம்பெனிக்கு வந்தேன். நேற்று என்னுடன் என் மகள் ஹரினியும் வந்தாள். கணவர் பையை எடுத்து வருவதற்காக உள்ளே சென்று விட்டார். எனது மகள் வாட்ச் மேனுடன் பேசிக்கொண்டிருந்தாள். அவரும் பேசிவிட்டு கம்பெனியின் ஸ்லைடிங் கேட்டை மூடினார். கேட் தெரியாமல் என் மகள் மீது விழுந்து விட்டது. தலை நசுங்கிய நிலையில் ஆஸ்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு ஓடினேன். குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் சொல்லி விட்டனர். என் வீட்டு மகாராணி இறந்து போய் விட்டாள்’’. இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக துணிக்கடை நிறுவனத்தின் மேலாளர் சீனிவாசன் மற்றும் சம்பத் ஆகிய இருவரையும் 304 ஏ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.