Take a fresh look at your lifestyle.

கிரிப்டோ கரன்சி: பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வெங்கடப்பிரியாவின் எச்சரிக்கை அறிவிப்பு

48

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு உயர் தொழில்நுட்ப கல்வி பயின்ற இளைஞர்களை தாய்லாந்து, மியான்மார் மற்றும் கம்போடியா நாட்டில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வேலைக்கு அழைக்கின்றனர். அவர்களுக்கு டிஜிட்டல் சேல்ஸ் அண்ட் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் வேலை, அதிக சம்பளம் என்ற பெயரில் சுற்றுலா விசாவில் ஏமாற்றி அழைத்துச் செல்கின்றனர். இவர்கள் கால்சென்டர் மோசடி மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடி போன்றவற்றில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுவதாகவும், அவ்வாறு செய்ய மறுக்கும் நிலையில் அவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் தகவல் பெறப்படுகிறது.

இனி வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாக செல்லும் இளைஞர்கள், மத்திய அரசின் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம் வேலைக்கான விசா, முறையான பணி ஒப்பந்தம், என்ன பணி என்ற விவரங்களை சரியாகவும், முழுமையாகவும் தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறான பணிகள் குறித்து உரிய விவரங்கள் தெரியாவிட்டால் தமிழக அரசை அல்லது சம்பந்தப்பட்ட நாட்டிலுள்ள இந்திய தூதரகங்களை தொடர்பு கொண்டும், பணி செய்யப்போகும் நிறுவனங்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்து கொண்டும், மத்திய அரசின் வெளியுறவுத்துறை அல்லது வேலைக்கு செல்லும் நாடுகளிலுள்ள இந்திய தூதரகங்களின் இணையதளங்களில் வெளியிடப்படும் அறிவுரைகளின் படியும், வெளிநாட்டு வேலைக்கு செல்லுமாறு இளைஞர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு உதவி தேவைப்படின் இத்துறையின் 044-28515288 என்ற தொலைபேசி எண்களையும், 9600023645, 8760248625 என்ற செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.