சென்னை, அக். 7–
சென்னை தாம்பரம், ஆவடி, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்ட காவல் நிலையங்களுக்கு ரத்த அழுத்த பரிசோதனை கருவிகளை டிஜிபி சைலேந்திரபாபு வழங்கினார்.
டிஜிபி சைலேந்திரபாபுவிடம் ரத்த பரிசோதனைக் கருவியை பெற்றுக் கொண்ட திருத்தணி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஏழுமலை.
சென்னை, தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்கள் மற்றும் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களுக்கு ரத்த அழுத்த பரிசோதனை கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை டிஜிபி அலுவலகத்தில் இன்று (07.10.2022) நடந்தது. இந்த நிகழ்ச்சியில் டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு காவல் ஆய்வாளர்களிடம் ரத்த அழுத்த பரிசோதனை கருவிகளை வழங்கினார்.
மேலும் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை காவல் ஆய்வாளர்களிடம் வலியுறுத்தி பேசினார். சிருஷ்டி ஏ ஜி மருத்துவமனை தலைவர் டாக்டர். முருகானந்தம் இருதய நோய் குறித்தும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும் முறைகள் குறித்தும் காவலர்களுக்கு விளக்கிக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் நிர்வாகப்பிரிவு ஏடிஜிபி சங்கர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.