ஆவடி காவல் ஆணையரகத்தில் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் குடும்பத் திற்கான மருத்துவம் மற்றும் கல்வி ஊக்கத் தொகையாக ரூ. 7.49 லட்சத்தை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் போலீஸ் குடும்பங்களுக்கு வழங்கினார்.
ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் காவலர் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மனிதநேயத்துடன் செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக ஆவடி காவல் ஆணையரகத்தில் பணிபுரியும் 34 காவல் அதிகாரிகள், ஆளிநர்களின் குடும்பத்துக்கு மருத்துவ செலவு மற்றும் கல்வி ஊக்கத் தொகையாக ரூ. 7 லட்சத்து 49 ஆயிரத்து 500ஐ நேரடியாக வழங்கினார். கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரின் இந்த மனிதநேய செயல்பாடு காவலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இந்த நிகழ்ச்சியில் செங்குன்றம் காவல் துணை ஆணையாளர் மணிவண்ணன், தலைமையிட துணை ஆணையர் உமையாள் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.