காவல் ஆளிநர்கள் சேமிப்பு பழக்கத்தை கடைபிடிக்கும் மேலாண்மை வகுப்புகள்: கமிஷனர் சங்கர்ஜிவால் துவங்கி வைத்தார்
savings scheme classes commissioner shankar jiwal
காவல் ஆளிநர்களுக்கு சேமிப்பு பழக்கத்தை கடைபிடிக்கும் பொருட்டு காவல் ஆளிநர்களுக்கு நிதிமேலாண்மை வகுப்பினை கமிஷனர் சங்கர்ஜிவால் துவங்கி வைத்தார்.
சென்னை நகரில் காவல ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, காவல் ஆளிநர்கள் தங்களது வருமானத்தை வீண் செலவு செய்யாமல் சேமிக்கும் பழக்கத்தை கடைபிடிக்க நிதி மேலாண்மை வகுப்புகள் நடத்த கமிஷனர் சங்கர் ஜிவால் ஆணையாளர் ஏற்பாடு செய்தார்.
அதன்பேரில், இன்று (18.06.2022) காலை, காவல் ஆணையரகத்தில் காவல் ஆளிநர்களுக்கான நிதி மேலாண்மை வகுப்பினை (Financial Management Workshop) சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் துவக்கி வைத்தார். அப்போது கமிஷனர் பேசுகையில், ‘‘காவல் ஆளிநர்கள் தங்களது சம்பளத்தை வீண் செலவு செய்யாமல் நல்ல முறையில் சேமிக்கவும், வீண் செலவுகள் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளில் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த வருமானத்தை வீண் விரயம் செய்யாமல் நல்ல வழியில் சேமிக்கவும் காவல் ஆளிநர்களுக்கு இவ்வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. இது போல வாரம் தோறும் 150 காவல் ஆளிநர்களுக்கு இவ்வகுப்புகள் நடத்தப்படும்’’ இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நிதி மேலாண்மை வகுப்பின் சிறப்பு விரிவுரையாளராக நியமிக்கப்பட்டுள்ள, பல கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களில் சிறப்பு விரிவுரையாளராக பணியாற்றிக் கொண்டிருக்கும் ஓய்வு பெற்ற பேராசிரியர் நரேந்திரா, சேமிப்பு பழக்கத்தின் நன்மைகள், சரியான சேமிப்பு முறையை தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள், அவற்றை கையாளும் முறை, சேமிப்பினால் கிடைக்கும் எதிர்கால நன்மைகள் குறித்து காவல் ஆளிநர்களுக்கு எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) லோகநாதன், துணை ஆணையாளர்கள் செந்தில்குமார் (தலைமையிடம்), ஆயுதப்படை துணைக்கமிஷனர் சவுந்திரராஜன் (ஆயுதப்படை) மற்றும் 150 ஆண், பெண் ஆயுதப்படை காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
*