காவல் கரங்கள் உதவி மையம் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து
மீட்கபட்ட 52 நபர்களில் தமிழகத்தை சேர்ந்த 13 நபர்களில், 8 நபர்களின்
உரிய முகவரி கண்டறிந்தும் சென்னையை சேர்ந்த ஆதரவில்லாமல் இருந்த
1 நபரையும் மீட்டு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால்
அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைத்து, அத்தியாவசிய
பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.
சென்னை பெருநகர காவல் துறையில் “காவல் கரங்கள்” என்ற உதவி மையம் ஆரம்பிக்கப்பட்டு நல்லமுறையில் செயல்பட்டுவருகிறது. இந்த உதவி மையம் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஆதரவில்லாமல் சுற்றித் திரியும் மனநிலை மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களையும், முதியோர்களையும், பெண்கள் மற்றும் குழந்தைகளையும் கண்டறிந்து உரிய பாதுகாப்புடன் 11605 க்கள் மூலம் மீட்டு தேவைபடூவோருக்கு சிகிச்சை அளித்தும் அரசு மற்றும் அரசு சாரா தொண்டூ நிறுவனங்களிலும் பாதுகாப்பாக தங்க
வைத்து நல்லமுறையில் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் அவர்களுடைய உரிய
முகவரியை கண்டறிந்து அவர்களுடைய பெற்றோர்களுடனும், உறவினர்களுடனும்
நல்லமுறையில் சேர்த்து வைக்கும் பணியையும் காவல் கரங்கள் செய்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக. தனியாக சுற்றி திரிந்த வடமாநிலத்தை சேர்ந்த மனநலம்
மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்ட 176 நபர்களை கண்டறிந்து தொண்டூ நிறுவனங்களில்
தங்க வைத்து பராமரிக்கபட்டு வந்தது. மீட்கப்பட்டு பராமரித்து வந்தவர்களை மீண்டும்
அவர்களது குடும்பத்தாருடன் சேர்க்க “காவல் கரங்கள்” உதவி மையத்துடன் பசியில்லா
தமிழகம், மீட்பு ட்ரஸ்ட், அன்பு ஜோதி, ஆதிய தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து
20.04.2022 அன்று சென்னை சென்ட்ரல் மத்திய இரயில் நிலையத்திலிருந்து ரயில் முலம் அனுப்பி வைத்து பீரகாக்றபா மாநிலத்தில் உள்ள 490 காலா (நம்ம வீடு) என்ற தொண்டூ நிறுவனத்திடம் சேர்த்து அவர்கள் மூலம் உரிய முகவரி கண்டறிந்து குடும்பத்தாருடன் சோத்து வைக்க “கருணை பயணம்-2” ஏற்பாடு செய்யப்பட்டது.
அதுபோல் ீறாகராகா ராவா தொண்டு நிறுவனத்தில் தங்க வைத்து
பராமரிக்கப்பட்டு வந்த தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச்
சேர்ந்த 52 நபர்களை மீட்டு அவர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 13 நபர்கள்
(ஆண்கள்-8 பெண்கள்-5), ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் 32 நபர்கள் (ஆண்கள்-15,
பெண்கள்-17), கேரளாவைச் சேர்ந்தவர்கள் 2 ஆண்கள் மற்றும் கர்நாடகாவை சேர்ந்தவர்கள்
6 நபர்கள் (ஆண்கள்-3, பெண்கள்-3) ஆதிய 52 நபர்களை மீட்டு டெல்லியிலிருந்து
திருவள்ளுவர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் தமிழகம் கொண்டூ வந்து கர்நாடகா மாநிலத்தை
சோந்த நபர்களை காப்பகத்திலும், தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்களை 460 ]/ர்த51௦1). 11வுரக* 1மதர் காப்பகத்திலும், கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்களை 5614 காஞ்சாங்காடு கேரளா காப்பகத்திலும் தங்க வைத்து அவர்களை பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தை சேர்ந்த 13 நபர்களை (ஆண்கள்-8 பெண்கள்-5) நல்ல
முறையில் தமிழகம் அழைத்து வந்து கொரோனா பரிசோதனை செய்து தண்டையார்பேட்டை
“அன்பகம்” “மனோலயா” காப்பகங்களில் தங்க வைத்து பராமரிக்கபட்டு மற்றும் மருத்துவ
சிகிச்சை அளிக்கப்பட்டது. மனநலம் பாதித்த நபர்களை காவல் கரங்கள் மூலம் நேரடியாக
விசாரிக்கப்பட்டு கலந்துரையாடி உரிய முகவரி கண்டறிந்து அவர்களை உறவினர்களுடன்
சேர்த்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பல வருடங்களுக்கு முன்பு காணாமல்
போன நபர்களும் கண்டறியப்பட்டூள்ளது. இத்துடன் சென்னையிலிருத்து மீட்கபட்டு
2 நபர்களின் அடையாளம் கண்டறியப்பட்டு அவர்களையும் குடும்பத்தாருடன் இணைக்க ஏற்பாடு செய்யப்பட்டூள்ளது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் .சங்கர் ஜிவால்
இன்று (18.05.2022) காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மீட்கப்பட்ட
தமிழகத்தை சேர்ந்த 13 நபர்களில் 7 நபர்களை மற்றும் சென்னையைச் சேர்ந்த
3 நபர்களின் உரிய முகவரியை கண்டறிந்து அவர்களின் குடும்பத்தாருடன் ஒப்படைத்தார்.
மேலும். மீட்கப்பட்ட நபர்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, உடைகள், கிருமிநாசனி.
முகக்கவசம் போன்ற 15 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பினை காவல் ஆணையாளர் அவர்கள் வழங்கினார்.
இதுவரை காவல் கரங்கள் உதவி மையம் மூலம் 2,816 வீடற்ற, ஆதரவற்ற
நிலையில் உள்ள மக்கள் மீட்கப்பட்டு அவர்களில் 1,634 பேர் காப்பகங்களில் தங்க
வைத்தும், 178 பேர் அவர்கள் குடும்பத்துடன் சேர்த்து வைக்கப்பட்டும், 182 பேர் மனநல
மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டும், உரிமை கோரப்படாத 822 இறந்த
உடல்கள் தன்னார்வலர்களின் உதவியுடன் இறுதி மரியாதையுடன் நல்லடக்கம் செய்தும் உதவி செய்து வருகிறார்கள்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையாளர் (தலைமையிடம்)
ஜெ.லோகநாதன், இணை ஆணையாளர் (தலைமையிடம்),
சாமுண்டீஸ்வரி, காவல் துணை ஆணையாளர் (நவீன காவல் கட்டுபாட்டு
அறை) .ஜி.ராமர் தெலுங்கானா மாநில காப்பகத்தின் செக்ரக்டரி ஜோசப் தாமஸ், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 110106 1௦2 1706 காப்பகத்தின் நிறுவனர் ராஜா மற்றும் தன்னார்வதொண்டு நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டு நிகிழ்ச்சியை சிறப்பித்தார்கள்