தமிழக அளவில் உயர் காவல் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் இறுதி போட்டி சென்னையில் உள்ள கமாண்டோ துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்றது. தமிழகம் முழுவதிலும் இருந்து 21 காவல்துறை உயர் அதிகாரிகள் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் டிஜிபி சைலேந்திர பாபு, ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ராத்தோட், ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால், சந்திப்மித்தல், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் மற்றும் பல காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதற்கு முன்பு கடந்த இரண்டு மாதங்களில் தமிழகத்தில் உள்ள நான்கு காவல் மண்டலங்கள் மற்றும் தனி பிரிவுகளில் உள்ள அனைத்து காவல் உயர் அதிகாரிகளுக்கும் துப்பாக்கி சுடும் போட்டி நடைப்பெற்றது. இறுதி போட்டியில் இன்று 21 காவல் உயர் அதிகாாரிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் கை துப்பாக்கி மற்றும் துப்பாக்கி பிரிவுகளில் கீழ்கண்ட காவல் அதிகாரிகள் பதக்கங்களை வென்றனர்.
ASP to SP கை துப்பாக்கி சுடும் போட்டி (Pistol / Revolver):
––––––––––––––––––––––––––––––––––––––––––––––
சேலம் எஸ்பி ஸ்ரீஅபிநவ் – தங்கம்
பாதுகாப்புப்பிரிவு எஸ்பி திருநாவுக்கரசு – வெள்ளிப்பதக்கம்
விழுப்புரம் ஏஎஸ்பி அபிஷேக் குப்தா – வெண்கலப்பதக்கம்
ASP to SP துப்பாக்கி சுடும் போட்டி (Rifle):
–––––––––––––––––––––––––––––––––
கள்ளக்குறிச்சி எஸ்பி பகலவன், தங்கம்
விழுப்புரம், ஏஎஸ்பி அபிஷேக் குப்தா வெள்ளி
சேலம் எஸ்பி ஸ்ரீ அபிநவ் வெண்கலம்
ASP to SP Overall Champion (Pistol/Revolver/Rifle):
–––––––––––––––––––––––––––––––––––––––
சேலம் எஸ்பி ஸ்ரீ அபிநவ், தங்கம்
விழுப்புரம் ஏஎஸ்பி அபிஷேக் குப்தா, வெள்ளி
பாதுகாப்புப்பிரிவு எஸ்பி டாக்டர் ஆர். திருநாவுக்கரசு, வெங்கலம்.
DIG to DGP கை துப்பாக்கி சுடும் போட்டி (Pistol / Revolver):
–––––––––––––––––––––––––––––––––––––––––––––––
டிஜிபி சைலேந்திர பாபு, தங்கப் பதக்கம்
சென்னை நகர கூடுதல் கமிஷனர் அன்பு, வெள்ளிப்பதக்கம்
நெல்லை, டிஐஜி பரவேஷ் குமார், வெண்கலப் பதக்கம்
DIG to DGP துப்பாக்கி சுடும் போட்டி (Rifle):
––––––––––––––––––––––––––––––––––
கார்த்திகேயன், போலீஸ் கமிஷனர், திருச்சி, – தங்கம்
அமல்ராஜ், தாம்பரம், போலீஸ் கமிஷனர் – வெள்ளிப்பதக்கம்
சைலேந்திர பாபு, டிஜிபி, தமிழ்நாடு -– வெள்ளிப்பதக்கம்
DIG to DGP Overall Champion (Pistol/Revolver/Rifle):
–––––––––––––––––––––––––––––––––––––––
சி. சைலேந்திர பாபு, டிஜிபி, தமிழ்நாடு – தங்கம்
அன்பு, கூடுதல் கமிஷனர், வடக்கு, சென்னை, – வெள்ளி
அமல்ராஜ், போலீஸ் கமிஷனர், தாம்பரம் மாநகரம் – வெண்கலம்
செந்தில் குமார், காவல் ஆணையாளர், மதுரை மாநகரம் – வெண்கலம்
இந்த இரண்டு பிரிவுகளில் இருந்து முதல் 12 இடங்களைப் பெற்ற அதிகாரிகளுக்குள் மீண்டும் ஒரு போட்டி வைக்கப்பட்டு, அதில் கீழ்கண்ட மூன்று காவல் உயர் அதிகாரிகள் Champion of Champion பதக்கம் மற்றும் கோப்பையை வென்றனர்.
சேலம் எஸ்பி ஸ்ரீ அபிநவ் – முதலிடம்
தாம்பரம் துணைக்கமிஷனர் சிபிசக்கரவர்த்தி – 2வது இடம்
நெல்லை, டிஐஜி பரவேஷ் குமார் – 3வது இடம்
இந்த போட்டிகள் முடிந்த பின்பு, நடந்த பரிசளிப்பு விழாவிற்கு டிஜிபி சைலேந்திர பாபு தலைமை ஏற்று பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கினார். இப்போட்டியினை செயலாக்கப்பிரிவு
ஏடிஜிபி பாலநாக தேவி தலைமையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்து நடத்தபட்டது.