Take a fresh look at your lifestyle.

காவல்துறை சார்பில் 5 ஆயிரம் ‘சிற்பி’ மாணவர்கள் தயாரித்த விதைப்பந்துகள்

66

சென்னை பெருநகரில் ‘சிற்பி’ திட்டத்தின் கீழ் உள்ள அரசு பள்ளியைச் சேர்ந்த 5,000 மாணவ மாணவிகள் ஒரே நேரத்தில் விதைப்பந்துகளை தயாரித்து வனத்துறையிடம் வழங்கியும், 5,000 மரக்கன்றுகளை நட்டும் உலக சாதனை படைத்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த சிற்பி திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் இருந்து மொத்தம் 5000 மாணவ. மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக நேற்று காலை சென்னை, ராணி மேரி கல்லூரி வளாகத்தில் “சிற்பி” திட்ட 5000 மாணவ, மாணவியர்கள்,“இயற்கையை பேணுவோம்” (CONSERVE NATURE) என்ற தலைப்பின் கீழ் விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரே நேரத்தில் விதைப்பந்துகளை தயார் செய்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும், 5,000 மரக்கன்றுகளை மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் நட்டனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் வீ. மெய்யநாதன், போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் முன்னிலையில் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களை ஊக்கப்படுத்தி சிறப்புரையாற்றினார். சிற்பி திட்ட மாணவர்கள் 5,000 பேர் ஒரே நேரத்தில் விதைப்பந்துகளை தயாரித்தும், 5,000 மரக்கன்றுகளையும் நட்டு உலக சாதனை படைத்ததற்கான விருதினை உலக சாதனை யூனியன் அமைப்பும், ஆசியனர் ரெக்கார்ட்ஸ், இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி மற்றும் தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய அமைப்புகள் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு , பசுமை தமிழ்நாடு மிஷன் தலைமை இயக்குநர் தீபக் ஸ்ரீவஸ்தவா மற்றும் சென்னை நகர தலைமையிட கூடுதல் கமிஷனர் லோகநாதன், இணைக்கமிஷனர் சாமுண்டீஸ்வரி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.