Take a fresh look at your lifestyle.

காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மராத்தான் ஓட்டம்: அமைச்சர் மா. சுப்பிரமணி துவங்கி வைத்தார்

70

சென்னை, அக். 9–

சென்னை நகரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு தொடர்பாக மினி மராத்தான் ஓட்டப்பந்தயப் போட்டியை அமைச்சர் மா. சுப்பிரமணி, சென்னை நகர வடக்கு கூடுதல் கமிஷனர் அன்பு ஆகியோர் துவங்கி வைத்தனர்.

 

சென்னை நகரில் காவல்துறையினர் சார்பில் போதை ஒழிப்பு தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் ஆவடியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியாக இரவு மராத்தான் ஓட்டப்பந்தய போட்டி நடந்தது. டிஜிபி சைலேந்திரபாபு, ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் ஆகியோர் இதனை துவங்கி வைத்தனர். இந்நிலையில் சென்னை பெருநகர காவல்துறை மற்றும் சென்னை மருத்துவ கல்லூரி இணைந்து நடத்தும் போதை பொருள் ஒழிப்பு நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடந்தது. போதை ஒழிப்பு 5 கி.மீ. தூர விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணி மற்றும் சென்னை நகர வடக்கு கூடுதல் கமிஷனர் அன்பு, இணைக்கமிஷனர் ரம்யா பாரதி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.