Take a fresh look at your lifestyle.

காவலர் நூலகம், பெண்கள் உடற்பயிற்சிக் கூடம் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் திறந்து வைத்தார்

48

சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் ரூ. 50.44 லட்சம் செலவில் காவலர்கள் பயன் பாட்டிற்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள நூலகம் மற்றும் பெண் காவலர்களுக்கான உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜி வால் திறந்து வைத்தார்.

சென்னை, எழும்பூர், ராஜரத்தினம் ஸ்டேடிய வளாகத்தில் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார்கள் பயன்பாட்டிற்காக ரூ. 50.44 லட்சம் செலவில் புதிதாக நூலகம், பெண் காவலர்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடம் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இன்று மாலை எழும்பூர், ராஜரத்தினம் மைதானம் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கலந்து கொண்டு காவலர் நூலகம், பெண்கள் உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றை திறந்து வைத்து பார்வையிட்டார்.

மேலும் சென்னை பெருநகர காவல் அதிரடிப்படை, அதிவிரைவுப்படை, காவல் வாத்தியக் குழு, மாநில பேரிடர் மீட்பு குழு ஆகியவற்றில் பணிபுரியும் காவல் ஆளி நர்களுக்கு புதிய சீருடைகளை வழங்கினார். இதனை தொடர்ந்து காவல் விளை யாட்டு குழுவினருக்கு விளையாட்டு உபகரணங்கள் , காவல் வாத்திய குழுவினருக்கு தேவையான உப கரணங்கள் மற்றும் காவலர் குழந்தைகள் காப்பகத்திற்கு தேவையான பொம்மை போன்ற விளையாட்டு சாதனங்கள் ஆகியவைகளையும் சங்கர்ஜிவால் வழங்கினார். நூலகத்தில் புத்தகங்கள் படிப்பதற்காக தனி அறையும், ஆன்லைன் மூலம் சட்டம், பல்வேறு நீதி மன்றங்களின் ஆணைகள் மற்றும் புத்தகங்கள் படிக்க குளிரூட்டப்பட்ட அறையில் கணினி வசதியும் செய்யப்பட்டுள்ளது. நூலகத்தில் மொத்தம் 56,485 நூல்கள் உள்ளது. காவலர்களின் குழந்தைகள் தங்களது மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்புக்காக நூலகத்தை பயன் படுத்தி பயனடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் சென்னை நகர தலைமையிட கூடுதல் கமிஷனர் டாக்டர் லோகநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.