சென்னை நகரில்
கொரோனா தொற்று நோய் தடுப்பு பணியின் போது தொற்றால் பாதிக்கப்பட்டு
உயிரிழந்த 24 காவல்அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் குடும்பத்திற்கு
முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.25 லட்சம் என மொத்தம் ரூ.6 கோடிக்கான வரைவோலைகளை கமிஷனர் சங்கர்ஜிவால் வழங்கினார்.
மேலும் புற்றுநோய் பாதிப்பால் மரணமடைந்த தலைமைக்காவலருக்கு
உதவும் வகையில் அவரது பேட்ச் காவலர்கள் வசூலித்த 14 லட்சம்,
காவலர் நலநிதி ரூ.65,000/- என மொத்தம் ரூ.14.65 லட்சம் தலைமைக்காவலரின் மனைவியிடம் வழங்கப்பட்டது.
தமிழக காவல்துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள்,
உடல்நலக் குறைவு மற்றும் சாலை விபத்தில் மரணமடைந்தால், மாண்புமிகு
முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனா நோய் தொற்று தடுப்பு பணியின் போது, தொற்றால் பாதிக்கப்பட்டு
உயிரிழந்த சென்னை பெருநகர காவலில் பணிபுரிந்த 1 உதவி ஆணையாளர்,
1 ஆய்வாளர், 13 உதவி ஆய்வாளர்கள், 8 தலைமைக்காவலர்கள் மற்றும் 1 காவலர்
என மொத்தம் 24 காவலர்கள் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொதுநிவாரண
நிதியிலிருந்து தலா ரூ.25 லட்சம் என மொத்தம் ரூ.6 கோடி நிதியுதவி ஒப்புதல்
பெறப்பட்டது.
அதன்பேரில், கமிஷனர் சங்கர் ஜிவால்,
இன்று (20.04.2022) மதியம், காவல் ஆணையாளர்
அலுவலகத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மேற்படி
24 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் குடும்பத்தினரிடம்
முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி வழங்கப்பட்டது
ஒரு குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் என மொத்தம்
ரூ.6 கோடிக்கான வரைவோலைகளை கமிஷனர் ஜிவால்ப்வழங்கினார்.
மேலும் காவலர்கள்
குடும்பத்தினரிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு அவற்றின் மீது உரிய
நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் கடந்த 29.07.2021 அன்று புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்த
1/-3 புழல் காவல் நிலைய தலைமைக்காவலர் காமராஜ் (1997 பேட்ச்) என்பவரின்
குடும்பத்தினருக்கு உதவும் வகையில் அவரது பேட்ச் காவலர்கள் வசூலித்த
ரூ.14 இலட்சம் மற்றும் காவலர் நல நிதி ரூ.65,000/- என மொத்தம் ரூ.14.65
இலட்சத்தை தலைமைக்காவலரின் மனைவியிடம் காவல் ஆணையாளர் வழங்கி
ஆறுதல் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்
(தலைமையிடம்) முனைவர் லோகநாதன், காவல் அதிகாரிகள் மற்றும்
காவலர் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர்.