சென்னை நகரில் சீருடைப் பணியாளர்கள், அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவல் ஆளிநர்க ளுக்கான சலுகை விலை பல்பொருள் அங்காடி சென்னையில் புனித தோமையர் மலை, புதுப்பேட்டை, கொண்டித்தோப்பு ஆகிய இடங்களில் இயங்கி வருகிறது. டிஜிபி சைலேந்திரபாபு தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் முனைவர் சைலேந்திரபாபு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் மற்றும் தமிழக
காவல் துறை கூடுதல் இயக்குநர் (நலன்) சைலேஷ் குமார் யாதவ், ஆகியோர் முன்னிலையில் சென்னை, புதுப்பேட்டை, ஆயுதப்படை வளாகத்தில் இயங்கி வரும் காவலர் பல்பொருள் அங்காடியில், காவலர்கள் மற்றும் காவலர்கள் குடும்பத்தினர் பயன்பாட்டிற்காக புதிதாக அமைக்கப்பட்ட மின்தூக்கியின் இயக்கத்தை துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் காவலர் பல்பொருள் அங்காடிகளில் உள்ள டிவி, ப்ரிட்ஜ், வாசிங்மெஷின், உள்ளிட்ட மின்னனு பொருட்கள், மளிகை சாமன்கள் உள்ளிட்ட அத்தியாவாசியமான பொருட்கள் மற்றும் இதர வீட்டு உபயோக பொருட்களின் இருப்பு மற்றும் விலை விபரங்களை எளிதாக முன்கூட்டியே அறிந்து கொண்டு வாங்கும் வகையில் தொடு திரை (KIOSK) வசதி மற்றும் Gpay, Phonepe போன்ற செல்போன் செயலிகள் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவலர் அங்காடியிலும் ஆன்லைன் மூலம் பணபரிவர்த்தனை செய்யும் புதிய வசதியையும் துவக்கி வைத்தார். ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள Kavalar Angadi என்னும் செல்போன் செயலி மூலம் பொருட்களின் இருப்பு மற்றும் விலை விபரங்களையும் செல்பேசி வாயிலாக பயனாளர்கள் தெரிந்து கொள்ளலாம். மேற்படி kavalar angadi செல்போன் செயலி மேம்படுத்தப்படவுள்ளது.
மேலும் காவலர்கள் குடும்பத்தினரிடம் டிஜிபி சைலேந்திரபாபு அவர்களது குறைகளை கேட்டறிந்து அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) முனைவர் லோகநாதன், தலைமையிட இணைக்கமிஷனர் சாமுண்டிஸ்வரி, காவல் துறை உதவி தலைவர் நலன் (AIG Wlefare) ராமகிருஷ்ணன், துணை ஆணையாளர்கள் ராமமூரத்தி (நிர்வாகம்), சௌந்தராஜன் (ஆயுதப்படை-1), கோபால் (மோட்டார் வாகனப்பிரிவு) காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.