சென்னை நகரில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. போக்குவரத்து மற்றும் சட்டம் – ஒழுங்கு காவலர்கள் வெயிலில் நின்றபடி பந்தோபஸ்து மற்றும் போக்குவரத்தை ஒழுங்குப் படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு வெயில் தாகத்தை தணிக்கும் விதமாக தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி அவர்களுக்கு இளநீர் வழங்க உத்தரவிட்டார். இன்று (02.03.2022) முதல் தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட அனைத்து இடங்களிலும் காவலர்களுக்கு இளநீர் வழங்கப்பட்டது.
இன்று காலை 11. 35 மணியளவில் ஓஎம்ஆர் ராஜீவ் காந்தி சாலை சோழிங்கநல்லூர் ஜங்ஷனில் போக்குவரத்து காவலர்கள், துப்புரவு தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்கள், பத்திரிக்கையாளர்களுக்கு கமிஷனர் ரவி இளநீர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தலைமையிட கூடுதல் கமிஷனர் காமினி, தாம்பரம் துணைக்கமிஷனர் சிபி சக்கரவர்த்தி, போக்குவரத்து துணைக்கமிஷனர் குமார், செம்மஞ்சேரி உதவிக்கமிஷனர் ரியாசுதீன், போக்குவரத்து உதவிக்கமிஷனர் ஸ்ரீதர், நுண்ணறிவுப்பிரிவு உதவிக்கமிஷனர் வெற்றிச்செழியன் மற்றும் சட்டம் ஒழுங்கு போக்குவரத்து ஆய்வாளர்கள் காவலர்கள் கலந்து கொண்டனர்.