Take a fresh look at your lifestyle.

காவலர்களுக்கான ஓட்டுநர் புத்தாக்கப் பயிற்சி: ஆவடி கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் துவங்கி வைத்தார்

40

சென்னை ஆவடி காவல் ஆணையரகத்தில் காவலர்களுக்கான ஓட்டுநர் புத்தாக்கப் பயிற்சியை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் துவங்கி வைத்தார்.

சென்னை, ஆவடி காவல் ஆணையரகத்தில் காவலர்களுக்கான ஓட்டுநர் புத்தாக்கப் பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டது. மாருதி சுசுகி கார் இந்தியா நிறுவனம் ஒருங்கிணைந்து அளிக்கும் இந்த பயிற்சி காவலர்களின் ஓட்டுநர் செயல்திறனை அதிகரிப்பது மற்றும் மற்றும் சாலை ஒழுக்கத்தையும் உறுதிசெய்யும் என போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ‘‘இந்த பயற்சியில் சாலை விதிகள்,
சாலை அடையாளங்கள் மற்றும் குறியிடுதல், சுயமாக வாகனம் ஓட்டும் பயிற்சி, எரி பொருள் சேமிப்பு குறிப்புகள், அவசரகாலங்களில் வாகனங்களை கையாளுதல், கடின மான சூழ்நிலையில் வாகனம் ஓட்டுதல் ஆகியவை குறித்த பாடங்கள் இந்த பயிற் சியின் போது காவலர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது. முதற்கட்டமாக இந்த பயிற்சி திட்டத்தில் 230 காவலர்கள் கலந்து கொள்கின்றனர்’’ இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஆவடி தலைமையிட கூடுதல் கமிஷனர் விஜயகுமாரி, காவல் அதிகாரிகள் மற்றும் மாருதி சுஸுகி கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சையத் பஹீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.