Take a fresh look at your lifestyle.

கால்பந்து வீரர் பீலே, வசனகர்த்தா ஆரூர்தாஸ், ஒளவை நடராசனுக்கு சட்டசபையில் இரங்கல்

41

உலகப்புகழ் பெற்ற கால்பந்து வீரர் பீலே, 1000 தமிழ் திரைப்படங்களுக்கு திரைக்கதை உரையா டல் எழுதிய வசனகர்த்தா ஆரூர்தாஸ், தமிழறிஞர்கள் க.நெடுஞ்செழியன், ஒளவை நடராசன் ஆகியோருக்கு தமிழ்நாடு சட்டசபையில் இன்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

2023ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2ஆம் நாள் கூட்டம் இன்று காலை 10 மணியளவில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் கூடியது. சமீபத்தில் காலமான பல துறைகளில் புகழ்பெற்ற பெருமக்களின் மறைவுக்கான இரங்கல் தீர்மானங்கள் கொண்டு வந்து சபாநாயகர் அப்பாவு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பல அரிய தமிழ் தமிழ் நூல்களை எழுதி வெளியிட்டு தமிழுக்கும் தமிழினத்துக்கு தொண்டாற்றி புகழ்பெற்ற தமிழறிஞர் க.நெடுஞ்செழியன் கடந்த 9.11.22 அன்று காலமானர்.
1000  தமிழ் திரைப்படங்களுக்கு திரைக்கதை உரையாடல் எழுதிய வசனகர்த்தா ஆரூர்தாஸ் 20.11 22 அன்று காலமானார்.அவர் தன் சிறந்த திரைக்கதை உரையாடல்கள் மூலம் சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த்திரையுலகை ஆண்டவர்.

தமிழறிஞர் ஒளவை நடராஜன் 21.1122 அன்று காலமானார். தொல்காப்பியம், கம்ப ராமாயனத்தில் புலமைகொண்டவர். அவற்றில் தொடர் உரைகள் ஆற்றி புகழ் பெற்று தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்ட உயர்ந்த பொறுப்புகள் பெற்று சிறந்த பணியாற்றியவர். பிரபல ஓவியர் எழுத்தாளர் மனோகர் தேவதாஸ் சமீபத்தில் கால மானார். அவர் மரபுசார்ந்த கட்டிடக்கலை ஓவியங்களை வரைந்து புகழ் பெற்றவர்.மத்திய அரசின் பத்மசிரி விருது பெற்றவர். தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய துணைத் தலைவராக பணியாற்றி சமீபத்தில் மறைந்தவர் மருத்துவர் டி. மஸ்தான். அவர் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி வகித்து அனைத்து தரப்பு மக்களுக்கும் அரும்பணியாற்றியவர்.

கால்பந்து ஜாம்பவான் பீலே உலகப்புகழ் பெற்ற கால்பந்து வீரராகத் திகழ்ந்தவர். அவர் 29 .11.22 அன்று மறைந்தார். உலகக்கோப்பைகளை வென்று கால்பந்து அரசாராக திகழ்ந்தவர். இவர்களுக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதன்பிறகு மறைந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிலையில் இரங்கல் தீர்மானம் முடிந்து சபையை நாளை வரை ஒத்திவைத்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

புதன்கிழமை காலை 10 மணிக்கு பேரவை மீண்டும் கூடும் போது கேள்வி நேரம் நடைபெறும். அதன்பின் ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் முன்மொழியப்பட்டு அதன் மீது விவாதம் நடைபெறும். தீா்மானத்தின் மீதான விவாதம் வியாழக்கிழமையும் தொடரும். விவாதங்களுக்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமையன்று பேசுவார் என அவைத் தலைவர் மு.அப்பாவு கூறினார்.