Take a fresh look at your lifestyle.

கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம்: தமிழ்நாடு போலீஸ் ஆண்கள் மற்றும் மகளிர் அணிகளுக்கு டிஜிபி பாராட்டு

202

தமிழ்நாடு போலீஸ் ஆண்கள் கால்பந்து அணி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ராணுவ மைதானத்தில் 25/11/2022 முதல் 04/12/2022 வரை நடைபெற்ற மஜ்ஜு சேத் அகில இந் திய கால்பந்து போட்டியில் பங்கேற்றது. இந்தியா முழுவதிலும் இருந்து, மும்பை, நாக்பூர், கோண்டியா, மத்தியப் பிரதேசம், ஆர்மி- XI, பீரங்கி சேவை மையம் -ஹைதராபாத், பஞ்சாப் போலீஸ் மற்றும் தமிழ்நாடு போலீஸ் ஆண்கள் கால்பந்து அணி ஆகிய 12 சிறந்த அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்றன. மேற்கண்ட அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக் கப்பட்டன.

தமிழ்நாடு அணி கோண்டியா எஃப்சியுடன் (2-0 கோல்கள்) காலிறுதிக்கு முந்தைய போட் டியை வென்றனர். மற்றும் டிபி, பார்மா -மும்பை (1-0 கோல்கள்) மற்றும் ஆர்மி-xI (டிரா) ஆகியவற்றுடன் அரையிறுதி லீக்கில் விளையாடி வென்றனர். தமிழ்நாடு போலீஸ் ஆண்கள் கால்பந்து அணி இறுதிப் போட்டியில் நுழைந்து பஞ்சாப் காவல்துறையுடன் விளையாடியது. இதில் தமிழ்நாடு போலீஸ் அணி 3/1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. தமிழ்நாடு போலீஸ் ஆண்கள் கால்பந்து அணி, சிறந்த கோல் கீப்பர் (ஜே.செல்வ குமார்), சிறந்த டிஃபென்டர் (எம்.விஜயன்), சிறந்த ஃபார்வர்டு (டி.கணேச மூர்த்தி) விருதுகளையும் பெற்றனர். தமிழ்நாடு காவல்துறை ஆண்கள் கால்பந்து அணியின் வெற்றிக்காக ரூ. 1,50,000- ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது.

இதேபோல், தமிழ்நாடு காவல்துறை மகளிர் கால்பந்து அணி சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் 03.12.2022 அன்று “பிரியா நினைவு மாநில அளவிலான கால்பந்து போட்டியில்” பங்கேற்றது. இந்தப் போட்டியில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, SDAT, SDAT எக்ஸலன்சி மற்றும் தமிழ்நாடு காவல்துறை என மொத்தம் 16 அணிகள் விளையாடின. மேற்கண்ட அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டன. தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணி இமாகுலேட் எஃப்சியுடன் (1-0 கோல்), கால் இறுதியை SDNB விஷ்ணவாவுடன் (1-0 கோல்) வென்றனர் மற்றும் SDAT- எக்ஸலென்சியுடன் (1-0 கோல்) அரையிறுதியை வென்றனர்.

தமிழ்நாடு காவல்துறை மகளிர் கால்பந்து அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்து பெங்க ளூரு  (KFC) கால்பந்து அணியுடன் விளையாடியது. தமிழ்நாடு காவல்துறை மகளிர் கால் பந்து அணி ரன்னர்ஸ் (0-1 கோல்) இடத்தைப் பிடித்தது. தமிழ்நாடு காவல்துறை மகளிர் கால்பந்து அணிக்கு ரூ. 1,00, 000 ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. இரு அணியினரையும் தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு பாராட்டினார். தமிழ்நாடு போலீஸ் கால்பந்து அணியின் புரவலர் திரு. கபில் குமார் சி சராத்கர். இ.கா. ப., சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையாளர் அவர்களும் உடனிருந்தார்.