Take a fresh look at your lifestyle.

கால்நடை பராமரிப்பு, மீன்வளம், மீனவர் நலத்துறையின் ரூ.312.37 கோடி கட்டிடங்கள்: ஸ்டாலின் திறந்து வைத்தார்

75

கால்நடை பராமரிப்பு துறை மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.312.37 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து, உறைவிந்து குச்சிகள் மற்றும் திரவ நைட்ரஜன் விநியோகம் செய்வதற்கான 16 வாகனங்களை வழங்கினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் 189 கோடியே 49 லட்சம் ரூபாய் செலவிலான புதிய கட்டிடங்கள், நீலகிரி மாவட்டம், ஊட்டி, மாவட்ட கால்நடை பண்ணையில் 47.50 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பாலினம் பிரிக்கப்பட்ட உறைவிந்து உற்பத்தி நிலையம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 61 கோடியே 32 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள் மற்றும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் சார்பில் 11 கோடியே 66 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார். மேலும், 2 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான உறைவிந்து குச்சிகள் மற்றும் திரவ நைட்ரஜன் விநியோகம் செய்வதற்கான 16 வாகனங்களை வழங்கினார்.