தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரியின் 155வது ஆண்டு நிறைவு விழா மற்றும் ஹாபிழ் பட்டமளிப்பு விழா நடந்தது.
அல்ஹாபிழ் S.M.S முஹ்யித்தீன் தவ்ஹீத் கிராஅத்துடன் தொடங்கிய இவ்விழாவுக்கு M.B.A. முஹ்யித்தீன் சதக்கத்துல்லா மரைக்கா ஹாஜி வகித்தார். M.K. முஹ்யித்தீன் தம்பி (துரை) ஆடிட்டர் வரவேற்புரை நிகழ்த்தினார். பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த அஸ்ஸெய்யித் அப்துல் காதிர் ஹைதரூஸி முத்துக்கோயா தங்கள் பாசில் பாக்கவி இளங்கூர் ஸனது வழங்கி பட்டமளிப்புப் பேருரை நிகழ்த்தினார்.
மவுலானா மவுலவி அல்ஹாபிழ் அல்ஹாஜ். S. அஸ்ஸெய்யித் அப்துர் ரஹ்மான் பாக்கவி ஃபாழில் அஹ்ஸனி M.A. பட்டமளிப்பு உரை நடத்தினார். முஹம்மது அலி மிஸ்பாஹி மஹ்ழரி சிறப்புரை ஆற்றினார். மேலும் மலுமஹ்ழரத்துல் காதிரிய்யா அரபிக்கல்லூரி பேராசிரியர்கள் வாழ்த்துரை வழங்கினர். அல்ஹாஜ்.P.M.A.C. நூர்தீன் நன்றியுரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹாஜ். அல்ஹாபிழ். K.A. அஹ்மது அப்துல் காதிர் ஆலிம் பாத்திஹா துஆ ஓதினார்கள். மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபிக்கல்லூரியில் இந்த ஆண்டு 15 ஆலிம்கள் மற்றும் 13 ஹாபிழ்கள் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது.