Take a fresh look at your lifestyle.

காயல்பட்டினத்தில் நபிகள் நாயகத்தின் மாபெரும் புர்தா மஜ்லிஸ்: மவுலானா மவுலவிக்கள் பங்கேற்பு

113

“சுன்னத் வல் ஜமாஅத் மாணவர் அமைப்பின்”(SSF) சார்பாக நடைபெற்ற கலை இலக்கிய போட்டியின் பரிசளிப்பு விழா மற்றும் மாபெரும் புர்தா மஜ்லிஸ் மிக சிறப்பான முறையில் நேற்று காயல்பட்டினம் ஜீலானிய்யா மஸ்ஜிதில் வைத்து நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு S.H. ரஹ்மத்துல்லாஹ் தலைமை வகித்தார். A.H.M. அஸ்ஸெய்யித் ஸகரிய்யா மவ்லானா, மவ்லவி அல்ஹாபிழ் ஷா மஹ்ழரி, மவ்லவி M.ஷுஐபு றஹ்மான் ஃபாழில் அஹ்ஸனி மற்றும் ஜீலானி மஸ்ஜித் நிர்வாக பெருமக்கள் முன்னிலை வகித்தனர். முஹம்மது ஷமீம் நிகழ்வின் துவக்கத்தில் அழகான கீதம் ஒன்றை இசைந்தார். நிகழ்ச்சிக்கு வருகைப் புரிந்த அனைவரையும் அன்புடன் வரவேற்று காயல் M.Y. ஜெஸ்முத்தீன் வரவேற்புரை நிகழ்த்தினார். பின்னர் அன்வரி இஹ்வான்கள் சங்கத்தினரின் மாபெரும் சிறப்பு புர்தா மஜ்லிஸ் நடைபெற்றது.

இந்த புர்தா மஜ்லிஸிற்கு மவ்லவி Z.மாஹீன் அன்வரி ஹஸ்ரத் தலைமை வகித்தார்.
மெளலானா மவ்லவி அல் ஹாபிழ்.S. அஸ்ஸெய்யித் அப்துர் ரஹ்மான் பாகவி ஃபாழில் அஹ்ஸனி தங்கள் மற்றும் மெளலானா மவ்லவி: அல் ஹாபிழ் M.A.K. ஷுஐபு மஹ்ழரி போன்றோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வு அனைத்தையும் அல் ஹாபிழ்:M. முஹம்மத் அன்வரி ஹஸ்ரத் தொகுத்து வழங்கி னார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் M.M. மன்னர் அப்துல்லாஹ் நன்றியுரை வழங்கினார். சிறப்புமிகு இந்நிகழ்வில் உலமாக்கள், உமராக்கள், சுன்னத் வல் ஜமாஅத் மாணவர் அமைப்பு செயல்வீரர்கள், சிறார்கள், தாய்மார்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.