Take a fresh look at your lifestyle.

காயல்பட்டினத்தில் தங்கத்திருமேனி தாஹா நபியின் சிறப்புகள் நூல் வெளியீட்டு விழா

70

காயல்பட்டினத்தில் தங்கத்திருமேனி தாஹா நபியின் சிறப்புகள் குறித்த நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

தூத்துக்குடி, காயல்பட்டணம் மஸ்ஜித் ஜீலானியில் கவ்துல் ஆலம் விழா, நூல் வெளியிட்டு விழா, ஈஸால் தவாப் நிகழ்வு ஆகிய முப்பெரும் விழாக்கள் மவ்லவி ஓஎல் நூகு சிராஜூ த்தீன் பாகவி தலைமையில் நடைபெற்றது. எஸ் எச் ரஹ்மத்துல்லாஹ், கிலுறு முஹம்மத், ஜவாஹீர், அஹ்மத் முஹ்யித்தீன் ஆகியோர் முன்னிலை வகித்த இவ்விழாவில் ஹாபிழ் எம்எம்எஸ் முஹம்மத் ரய்யான் கிராத் ஓதினார். எஸ்எம் முஹம்மத் ஷமீம் இஸ்லாமிய கீதம் இசைத்தார். காயல் ஜெஸ்முதீன் வரவேற்புரை ஆற்றினார்.

மவ்லவி எம்எஸ் முஹம்மத் ஷா மஹ்ழரி துவக்கவுரை ஆற்ற, இலங்கை மவ்லவி அலவிஷாலிஹ் மவ்லானா முர்ஷி தங்கள் சிறப்புரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து மவ்லானா தங்கள் எஸ். செய்யித் அப்துர் ரஹ்மான் பாகவி பாஜில் அஹ்ஸனீ சிற்றுரை நிகழ்த்தினார். பின்னர் காயல் ஜெஸ்முதீன் எழுதிய ‘தங்கத்திருமேனி தாஹா நபியின் சிறப்புகள்’ -நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது. முதல் பிரதியை அப்துர் ரஹ்மான் தங்கள் ஹழ்ரத் வெளியிட இலங்கை மவ்லானா அலவி சாலிஹ் முர்ஷி தங்கள் பெற்றுக் கொண்டார். பின்னர் மவ்லவி அப்துர் ரவூப் ஹஜ்ரத் (மல்லிப்பட்டினம்) மற்றும் ஏபி முஹம்மத் முஸ்லியார் இருவருக்கும் அப்துர் ரஹ்மான் தங்கள் ஹஜ்ரத் ஈஸால் தவாப் செய்தார். மவ்லவி என்எம் மன்னர் அப்துல்லாஹ் மஹ்ழரி நிறைவுரை நிகழ்த்தினார்.
மவ்லானா மவ்லவி எம். முஹம்மத் அன்வரி தொகுத்து வழங்கினார்.